Avar Naamam Yesu Kristhu | அவர் நாமம் இயேசு கிறிஸ்த - Bennet Christopher

Song | Avar Naamam |
Album | Single |
Lyrics | Bennet Christopher |
Music | Immanuel Jacob |
Sung by | Bennet Christopher |
- Tamil Lyrics
- English Lyrics
வானத்திலும் இந்த பூமியிலும்
வல்லமையான ஒரு நாமம் உண்டு
மனுஷருக்குள்ளே வல்லமையான
வேறொரு நாமம் இல்லை
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு
அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு
நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும்
எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும்
நாம் விடுதலை அடைவதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
3. அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும்
தீமையானாலும் நன்மையாய் மாறும்
நம் காரியம் வாய்ப்பதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
4. அவர் நாமத்தில் பரிசுத்தம் உண்டு
நமக்கு நித்திய ஜீவனும் உண்டு
நித்தம் அவரோடு வாழ்வதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
வானத்திலும் இந்த பூமியிலும்
வல்லமையான ஒரு நாமம் உண்டு
மனுஷர்களுக்குளே வல்லமையான இயேசுவின் நாமமது
இயேசு நாமம் எனக்கு போதும்
5. அவர் நாமத்தில் ஆரோக்யம் உண்டு
கொடும் (இந்த) வியாதியின் முடிவதில் உண்டு
நாம் சுகமுடன் வாழ்வதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
6. அவர் நாமத்தில் வாசல்கள் திறக்கும்
பெரும் பர்வதம் மெழுகுப்போல் உருகும்
நாம் முன்னேறிச் செல்வதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
English
Avar Naamam Yesu Kristhu | அவர் நாமம் இயேசு கிறிஸ்த - Bennet Christopher
Reviewed by Christking
on
March 09, 2025
Rating:

No comments: