Yesuvin Anbu - இயேசுவின் அன்பு | Winston Derik - Christking - Lyrics

Yesuvin Anbu - இயேசுவின் அன்பு | Winston Derik


உம்மை மறந்த நாள் ஏராளம்
விட்டு பிரிந்த நாள் ஏராளம்
துரோகம் செய்த நாள் ஏராளம்
தூரம் சென்ற நாள் ஏராளம்

உயரமான அன்பு என்னை உயர்த்திவைக்கும் அன்பு
உன்னதத்தில் என்னை ஏற்றி அழகு பார்க்கும் அன்பு

இயேசுவின் அன்பு - 2
நேசரின் அன்பு – 2

எனக்காக பரிதபிக்க யாரும் இருந்தது இல்லை
ஒரு கண்ணும் என் பேரில் இரக்கம் வைக்க வில்லை
மிதிப்பதற்கு ஏதுவாக வழியில் கிடந்த என்னை பார்த்து
பிழைத்திரு என்று சொல்ல யாரும் விரும்ப வில்லை

நீர் என்னை கடக்கும் பொது பார்த்து பிழைத்திரு என்றிர்
வயலின் பயிரை போல வளர்ந்து பெறுக செய்திர்

மனிதனின் அன்புக்காக ஏங்கிய நாட்கள் உண்டு
உம்மைவிட்டு பிரிந்த நாட்கள் ஏராளம் உண்டு
எனக்காக நீர் செய்த அனைத்தையும் மறந்து போனேன் நான்
உம் அன்பை கூட உணராத பாவியாக இருந்தேன்

தொலைந்த என்னை தேடியே மேய்ப்பனாக வந்தீர்
உம அன்பால் என்னை மார்பில் அணைத்து கொண்டீர்

English


Yesuvin Anbu - இயேசுவின் அன்பு | Winston Derik Yesuvin Anbu - இயேசுவின் அன்பு | Winston Derik Reviewed by Christking on December 02, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.