Maranthane - மறந்தேன | Pr Guru Isak | Jamuna Guru Isak - Christking - Lyrics

Maranthane - மறந்தேன | Pr Guru Isak | Jamuna Guru Isak


மறந்தேனே மனதில் வைக்கவில்லையே
விலகினேனே பின்தொடர்ந்து வந்தீரே - 2

மறவாத தேவன் நீரே விட்டு விலகாத தெய்வம் நீரே - 2

மறந்தேனே மனதில் வைக்கவில்லையே
விலகினேனே பின்தொடர்ந்து வந்தீரே - 2

1. வேதனை வந்த போது தேவன் இல்லை என்றேன்
துன்பம் நிறைந்த போது தூரம் போனேன் - 2
ஏமாற்றம் வந்த போது வார்த்தையை கொட்டினேன் - 2
உடைந்தவனாய் நான் உம்மை மறந்தேன்
உடைந்தவளாய் நான் உம்மை இழந்தேன் - மறந்தேனே

2. ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீர்
இழந்ததை எல்லாம் மீட்டு தந்தீர் - 2
வெட்கப்பட்ட இடத்திலே கொண்டு வந்து நிறுத்தினீர் - 2
நிறுத்தின இடத்திலே தலையை உயர்த்தினீர் - 2 - மறந்தேனே

3. சிலுவையை எனக்காக சுமந்தது ஏனோ
சீர் கெட்ட எந்தனின் செய்கைக்கு தானோ - 2
இன்னும் அதிகமாய் நேசிப்பதேனோ - 2
மீட்டது உந்தனின் இரத்தம் தானோ
நிலைப்பது உந்தனின் கிருபை தானோ - மறந்தேனே

English


Maranthane - மறந்தேன | Pr Guru Isak | Jamuna Guru Isak Maranthane - மறந்தேன | Pr Guru Isak | Jamuna Guru Isak Reviewed by Christking on December 02, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.