Athikalayil - அதிகாலையில் | Joseph Aldrin
Song | Athikalayil |
Album | Single |
Lyrics | Dr. Joseph Aldrin |
Music | Johnpaul Reuben |
Sung by | Dr. Joseph Aldrin |
- Tamil Lyrics
- English Lyrics
அதிகாலையில் உம் கிருபையை கேட்கப்பண்ணும்
நாள் முழுதும் நான் நடக்க பாதையை காட்டும்-3
ஆத்துமாவை நான் உயர்த்துகிறேன்
உம்மிடத்தில் நான் உயர்த்துகிறேன்-2
இயேசையா நீரே என் தேவன்
இயேசையா உம்மை நம்பியுள்ளேன்-2
1.கைகளை உமக்கு நேராக விரிக்கின்றேன்
(ஒரு) வறண்ட நிலம் போல் உமக்காய் தவிக்கின்றேன்-2
உம் முகம் காணாமல் சோர்ந்து போவேன்
உம் குரல் கேளாமல் துவண்டு போவேன்-2-இயேசையா
2.பூர்வ நாட்களை நினைத்துப்பார்க்கின்றேன்
உம் செயல்களை எல்லாம் தியானித்து மகிழ்கின்றேன்-2
உம் கிருபையை நினைத்து துதிக்கின்றேன்
உம் உண்மையை எண்ணி உயர்த்துகிறேன்-2-இயேசையா
3.உமது விருப்பத்தை அனுதினம் நான் செய்திட
எனக்கு போதித்து நடத்திடும் என் தெய்வமே-2
செம்மையான வழிகளிலே
உம் நல்ல ஆவியால் நடத்திடுமே-2-இயேசையா
English
Athikalayil - அதிகாலையில் | Joseph Aldrin
Reviewed by Christking
on
December 02, 2024
Rating:
No comments: