Appa Appa - அப்பா | Tamil Christian Song
Song | Appa |
Album | Single |
Lyrics | N/A |
Music | N/A |
Sung by | N/A |
- Tamil Lyrics
- English Lyrics
அப்பா அப்பா உங்க நெஞ்சுல சாஞ்சிக்கிறேன் ஏங்குறேன் பா உங்க நேசத்த நினைக்கையிலே சின்னஞ்சிறு வயசுல சிறுமைப்பட்டேன் அடைக்கலமா
உம்மைத் தேடி வந்தேன்
பிஞ்சு உள்ளம் உம் அன்பை எண்ணி பஞ்சு பஞ்சா வாடுறேன்பா! சின்ன உள்ளம் உன் அன்பு என்னி சொல்லி சொல்லி பாடுறேன்ப்பா
1. சிலுவை சுமந்த தோள் மேல என்ன சுமந்த தெய்வம் நீர்... மங்கி எரியும் திரியாய் போனேன் அனைந்திடாமல் காத்தீரே... அடைக்கலமா நான் தேடி வந்தேன் என் ஆறுதலும் நீரே... புகழிடமா நான் ஓடி வந்தேன் என் தேறுதலும் நீரே
2. முள்ளப்போல வாழ்ந்த என்ன கிரீடமாக தாங்கினீர்... தெரிந்து போன நாணல் ஆனேன் முறிந்திடாமல் காத்தீரே... நியாயத்துக்கு ஜெயம் கிடைக்கும் வரை உன் கண்கள் ஓய்வதில்ல... எளியவன நீர் மறப்பதில்ல உம் இரக்கங்கள் முடிவதில்லை
3. இயேசுவே நான் உம்ம பார்க்க நெடுநாளா வாடுறேன்... உம்மா பார்க்க தகுதியும் இல்ல ஆனாலும் தேடுறேன்... உம் குரல் கேட்டு நான் ஓடி வந்தேன் உன் நிழலில் சாய்ந்திருப்பேன்... உன் கரம் பிடித்து நான் நடந்திடவே உன் மார்பில் சாய்ந்திடுவேன்... பிஞ்சு...
English
Appa Appa - அப்பா | Tamil Christian Song
Reviewed by Christking
on
December 02, 2024
Rating:
No comments: