Aayiram Thalaimuraigal - Johnkish - Christking - Lyrics

Aayiram Thalaimuraigal - Johnkish


ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் முடிவில்லா இரக்கங்களால் முடிசூட்டுவார்
பூமியில் வாழும் மனிதர்களுக்கு பத்துக் கட்டளை தேவன் எழுதித் தந்தாரே
பூமியில் வாழும் மனிதர்களுக்கு சொந்த விரலினால் தேவன் எழுதித் தந்தாரே - (2)

1.என்னையன்றி வேறே தேவன் வேண்டாம் என்னையன்றி வேறே தேவன் இல்லை
யாதொரு சொரூபமும் வேண்டாம் யாதொரு விக்ரகமும் வேண்டாம்
கர்த்தரின் கட்டளையை கவனமாய்க் கைக்கொண்டால் வைப்பார் உன்னை மேன்மையாக வைப்பார்
அவரின் சத்தத்துக்கு உண்மையாய் செவிகொடுத்தால் வைப்பார் உன்னை மேன்மையாக வைப்பார்
ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்

2.தேவனின் நாமத்தை வீணாய் ஒருபோதும் வழங்காதிருப்பாய்
ஏழாம் நாள் ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிப்பாய்
கர்ப்பத்தின் கனியையும் நிலத்தின் கனியையும் தருவார் உன்னை ஆசீர்வதித்து வைப்பார்
பிசையும் தொட்டியையும் உந்தன் கூடையையும் நிரப்புவார் - உன்னை ஆசீர்வதித்து நிரப்புவார்
ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்

3.உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கு பெற்றோரை கனம்பண்ண வேண்டும்
உள்ளத்தில் கோபம் கொள்ள வேண்டாம் கோபத்தால்கொலை செய்ய வேண்டாம்
உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதங்கள் முறியும் உன் கண்கள் அதைக் காணும்
உந்தன் சத்துருக்கள் ஏழு வழியாக ஓடுவார் உன் கண்கள் அதைக் காணும்
ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்

4.விபசார பாவம் செய்யவேண்டாம் கண்களால் இச்சை செய்ய வேண்டாம்
களவென்னும் பாவம் செய்ய வேண்டாம் களவால் செல்வம் சேர்க்க வேண்டாம்
கர்த்தரின் நாமத்தைத் தரிப்பிக்கும் ஜனமாக வைப்பார் உன்னை நிலைப்படுத்துவார்
உந்தன் தேசத்தில் ஏற்ற காலத்தில் பொழியும் - மழை பொழியச் செய்வார்
ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்

5.பொய்ச்சாட்சி சொல்லவே வேண்டாம் நாவாலே கொலை செய்ய வேண்டாம்
பிறரின் பொருள்மீது இச்சை வேண்டாம் இச்சையால் பாவம் செய்ய வேண்டாம்
வாசல்கள் வழியாக நகரத்தில் பிரவேசிக்கச் செய்வார் - உன்னை அவரோடு சேர்ப்பார்
ஜீவ விருட்சத்தின் அதிகாரம் உனக்குத் தருவார் அவர் உன்னோடு இருப்பார்

ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் முடிவில்லா இரக்கங்களால் முடிசூட்டுவார்
பூமியில் வாழும் மனிதர்களுக்கு பத்துக் கட்டளை தேவன் எழுதித் தந்தாரே
பூமியில் வாழும் மனிதர்களுக்கு சொந்த விரலினால் தேவன் எழுதித் தந்தாரே - (2)
ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்

English


Aayiram Thalaimuraigal - Johnkish Aayiram Thalaimuraigal - Johnkish Reviewed by Christking on December 02, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.