Naan Udaikkapaduvathu - நான் உடைக்கப்படுவத | Eva. David Vijayakanth - Christking - Lyrics

Naan Udaikkapaduvathu - நான் உடைக்கப்படுவத | Eva. David Vijayakanth


நான் உடைக்கப்படுவது
உம் சித்தம் என்றால்
உடைகிறேன் ஐயா
உம் சித்தம் நிறைவேற்ற
நான் அழுவது உம் சித்தம் என்றால்
அழுகிறேன் ஐயா
உம் சித்தம் நிறைவேற்ற

உடைந்து போனேன் நான்
உம் கரத்தில் எடுத்தீரே
என் அழுகை எல்லாமே
உம் கணக்கில் வைத்தீரே-2

உமக்கேற்ற பாத்திரமாய்
மீண்டும் உருவாவேன்
கணக்கில் உள்ள கண்ணீருக்கு
பலனும் நான் பெறுவேன்-2

1.மேகமே கரு மேகமே
நீ இருளாய் போனாயோ?
சுமைகளை பல சுமந்து நீ
உன்னில் வெளிச்சம் இழந்தாயோ?-2

நீ உடைவது அவர் சித்தம்
நிறைவேறட்டும் அது நித்தம்-2
உன் அழுகை எல்லாம்
ஆசீர்வாத அழகு மழையாகும்
உன் கண்ணீர் எல்லாம்
கவலை போக்கும் கண்ணீர் துளியாகும்-2

2.மலையே கன்மலையே
நீ காய்ந்து போனாயோ ?
வறட்சிகள் பல சூழ்ந்ததால்
நீ வறண்டு தவித்தாயோ ?-2

நீ உடைவது அவர் சித்தம்
நிறைவேறட்டும் அது நித்தம்-2
உன் அழகை எல்லாம் தாகம் தீர்க்கும்
தண்ணீர் தடமாகும்
உன் கண்ணீர் எல்லாம்
தேவ சமுகத்தின் சாட்சியாய் மாறும்-2


Naan Udaikkapaduvathu
Um Siththam Entraal
Udaikirean Aiyya
Um Siththam Niraivettra
Naan Azhuvathu Um Siththam Entraal
Um Siththam Niraivettra

Udainthu Ponean Naan
Um Karaththil Eduththeerae
En Alugai Ellamae
Um Kanakkil Vaitheerae

Umakkettra Paathiramaai
Meendum Uruvaanean
Kannkkil Ulla Kanneerukku
Belanum Naan Peruvean

1.Megamae Karunai Meagamae
Nee Irulaai Ponaayo
Sumaiglai Pala Sumanthu Nee
Unnil Velicham Ilanthaayo

Nee Udaivathu Avar Siththam
Niraiverattum Athu Niththam
Un Alagu Ellaam
Aaseervaatha Azhagu Mazhaiyaagum
Un Kanneer Ellaam
Kavalai Pokkum Kanneer Thuliyaagum

2.Malaiyae Kanmalaiyae
Nee Kaainthu Ponayo
Varatchikal Pala Soozhnthathaal
Nee Varandu Thaviththaayo

Nee Udaivathu Avar Siththam
Niraiverattum Athu Niththam
Un Alagu Ellaam Thaagam Therkkum
Thanneer Thadamaagum
Un Kanneer Ellaam
Kavalai Pokkum Kanneer Thuliyaagum



Naan Udaikkapaduvathu - நான் உடைக்கப்படுவத | Eva. David Vijayakanth Naan Udaikkapaduvathu - நான் உடைக்கப்படுவத | Eva. David Vijayakanth Reviewed by Christking on December 02, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.