Kangalal Suthi Suthi - கண்களால் சுத்தி சுத்தி | Jasinthan - Christking - Lyrics

Kangalal Suthi Suthi - கண்களால் சுத்தி சுத்தி | Jasinthan


கண்களால் (கண்கள்) சுத்தி சுத்தி
பார்க்கும் வேளையில
திகைத்து போகின்றோமே
கர்த்தரின் படைப்பில-2

மலைகள் குன்றுகள்
அதை நாம் பார்க்கும் போதெல்லாம்
அவர் வார்த்தை வல்லமை
அதை நாம் அறிந்து கொள்ளலாம்
எட்டு திசை தூரம் எல்லாம்
கணிக்கும் போதெல்லாம்
அவர் அன்பின் நீளத்தை நாம்
கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்

1.அடடா வண்ண வண்ண பூக்களை பாரு
அழகாய் அவைகளை படைத்தது யாரு?
மகிழ்ந்தே பறக்கின்ற பறவையின் அழகு
ஒருமுறை அது பாடும் சங்கீதம் கேளு

தேவன் தாம் நம்மை காண்கிறார் என்று
சொல்லிடும் நற்செய்தி நமக்கு இன்று
இவைகளை கண்டு நாமும் நம்பிக்கையோடு
வென்றிடுவோம் நாம் எல்லாம் நேசர் நம்மோடு
- மலைகள் குன்றுகள்

2.ஒவ்வொன்றிற்கும் இருக்குதம்மா ஒவ்வொரு பருவம்
நித்தம் நம்மை தீண்டிடும் தென்றலை அறிவோம்
இன்பம் வரும் துன்பம் வரும் மாறி மாறி
எது நம்மை அசைத்திடும் தேவனை மீறி

கரை இல்லா அவரின் அன்பு கடலில
பயணம் போகின்றோமே வாழ்க்கை படகில
படைத்தவர் கரங்களின் அதிசயங்கள
கண்ட பின் சந்தேகங்கம் நியாயமே இல்லை
- மலைகள் குன்றுகள்

English


Kangalal Suthi Suthi - கண்களால் சுத்தி சுத்தி | Jasinthan Kangalal Suthi Suthi - கண்களால் சுத்தி சுத்தி | Jasinthan Reviewed by Christking on October 09, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.