Maname Maname - மனமே மனமே | V. Cyrish Shelton
Song | Maname |
Album | Single |
Lyrics | Sugan |
Music | V. Cyrish Shelton |
Sung by | V. Cyrish Shelton |
- Tamil Lyrics
- English Lyrics
மனமே மனமே பல பாவங்கள் நிறைந்த எந்தன் மனமே
இறையே இறையே என்ன செய்வது தெரியவில்லை
கனவே கனவே இந்த நிலை தான் மாறும் என்ற கனவே
வாழ்வே வாழ்வே நீ போகும் பாதை புரியவில்லை
தினம் தினம் பல சிலுவைகள்
அதில் நிலைகுலைந்து போகிறேன்
நான் எழுந்து நடந்திடத் துடிக்கிறேன்
ஏனோ சுமை தான் தடுக்கிறதே
கடல் அலை போல பாவங்கள் வந்து
மீண்டும் என்மேல் மோதிட
போகும் திசை தெரியா தேடல்கள்
கண்ணீரில் முடிகிறதே
மனமே மனமே பல பாவங்கள் நிறைந்த எந்தன் மனமே
இறையே இறையே என்ன செய்வது தெரியவில்லை
என் பாவங்களால் சிலுவையில் உனைத் துளைத்தேன்
ஆனால் நீர் மீட்பைப் பரிசாய் தந்தீர்
என் வாழ்க்கையை நான் நிறைவாக வாழ்ந்திட
நீர் உன் வாழ்வினை எனக்காய் சிலுவையில்
தினம் தினம் பல சிலுவைகள்
அதில் நிலைகுலைந்து போகிறேன்
நான் எழுந்து நடந்திடத் துடிக்கிறேன்
ஏனோ சுமை தான் தடுக்கிறதே
கடல் அலை போல பாவங்கள் வந்து
மீண்டும் என்மேல் மோதிட
போகும் திசை தெரியா தேடல்கள்
கண்ணீரில் முடிகிறதே
மனமே மனமே பல பாவங்கள் நிறைந்த எந்தன் மனமே
இறையே இறையே என்ன செய்வது தெரியவில்லை
கனவே கனவே இந்த நிலை தான் மாறும் என்ற கனவே
வாழ்வே வாழ்வே நீ போகும் பாதை புரியவில்லை
English
Maname Maname - மனமே மனமே | V. Cyrish Shelton
Reviewed by Christking
on
April 15, 2022
Rating:
No comments: