Deva kumaranae - தேவ குமாரனே | New Christmas Song
Song | Devakumarane |
Album | Sarithira Nayagan |
Lyrics | Dr.K.Eswaran |
Music | A.Stephenraj |
Sung by | Sis.Kirubavathi Daniel |
- Tamil Lyrics
- English Lyrics
தேவ குமாரனே தேவ குமாரனே
பூமிக்கு வந்தனையோ ஆராரிரோ
தந்தையும் தாயையும்
சிந்தையிலே வைத்து
உந்தனை கண்டனையோ
மங்களம் பொங்கிடும்
தேவ ஜனங்களின்
வாழ்த்தொலி கேட்கிறதே
வந்தனம் சொல்லிடும்
ஞானியர் கூட்டத்தில்
தூபங்கள் மணக்கிறதே
ராஜாதி ராஜனே
கர்த்தாதி கர்த்தரே
என்றும் வணங்கிடுவேன்
சேற்றில் இருந்து என்னை வந்து
தூக்கி எடுத்த அன்னையே
தேவ குமரன் உன்னை தோளில்
சுமக்கும் அன்பையே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
நீ தானே என் பிள்ளை
கண்பட்டு காயங்கள்
ஆகாத என் முல்லை
பூமியின் காவலனே
என் புண்ணிய பாலகனே
தாயினும் மேலாக
என் தந்தையின் நாயகனே
ராஜாதி ராஜனே
கர்த்தாதி கர்த்தரே
என்றும் வணங்கிடுவேன்
தாயன்பை தந்தவனே
பசி தாகங்கள் தீர்ப்பவனே
வேதங்கள் சொன்னவனே
வர்ண பேதங்கள் நீட்பவனே
வானதி வானுக்கும்
தேவாதி தேவன் நீ
இருள் பட்ட இடமெல்லாம்
ஒளியாக நிறைந்தாயே
தாழ்மையின் ருபத்தில் தான்
எங்கள் ஏழ்மையை பார்த்தவனே
வஞ்சனை செய்பவர் முன்
என் நிந்தையை தீர்த்தவனே
English
Deva kumaranae - தேவ குமாரனே | New Christmas Song
Reviewed by Christking
on
November 15, 2021
Rating:
No comments: