Seer Yesu Naathanuku - சீர் இயேசு நாதனுக்கு | Beryl Natasha
Song | Seer Yesu Naathanuku |
Album | Namo Vol-1 |
Lyrics | Clement Vedanayagam |
Music | Clement Vedanayagam |
Sung by | Beryl Natasha |
- Tamil Lyrics
- English Lyrics
சீர் இயேசு நாதனுக்கு
ஜெயமங்களம் ஆதி - 2
திரியேக நாதனுக்கு சுபமங்களம்- 2
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு - 2
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு - 2
1 ) ஆதி சரு வேசனுக்கு
ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு
நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு
நித்திய குணாலனுக்கு - 2
ஓதும் அனுகூலனுக்கு
உயர் மனுவேலனுக்கு - 2
2) மானாபி மானனுக்கு
வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல் தேயனுக்குக்
கன்னி மரிசேயனுக்கு -2
கோனார் சகாயனுக்கு
கூறு பெத்த லேயனுக்கு - 2
3) பத்து லட்சணத்தனுக்குச்
சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு
நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச்
சருவாதி காரனுக்கு - 2
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு - 2
சீர் இயேசு நாதனுக்கு
ஜெயமங்களம் ஆதி - 2
திரியேக நாதனுக்கு சுபமங்களம் - 2
சுபமங்களம் - 2
English
Seer Yesu Naathanuku - சீர் இயேசு நாதனுக்கு | Beryl Natasha
Reviewed by Christking
on
September 05, 2021
Rating:
No comments: