Um Kirubaiyin Uchchamay Naan | Maria Patricia
Song | Um Kirubaiyin |
Album | Single |
Lyrics | Dr.A.Pravin Asir |
Music | Fr.Sinto Chiramal |
Sung by | Maria Patricia |
- Tamil Lyrics
- English Lyrics
உம் கிருபையின் உச்சமே நான்...
(உம் கிருபையின் உச்சமே நான்...
அன்பை அளவின்றி பொழிந்தீரே...) x 2
(அருகதை இல்லாத என்னை...) x 2
(அள்ளியெடுத்து உச்சி முகர்ந்தீரே...) x 2
(அப்பா அப்பா என் இயேசப்பா...
எனக்கு எல்லாமுமே நீர் தானப்பா...) x 2
(உம் அன்பு தான் எனக்கு வேண்டுமே...
அது ஒன்று மட்டும் எனக்கு போதுமே...) x 2
1. (வாழ்வின் நெருக்கத்தினில் மாத்திரமே நான் நாடினேன்...
மனதுருக்கத்திலே மிகுதியான என் தேவனை...) x 2
(அங்கே, இங்கே, எங்கே என்று நான் தேடினேன்...) x 2
என் இதய கதவை தட்டி நின்ற என் இயேசுவை...
என் இயேசுவை...
அப்பா அப்பா என் இயேசப்பா...
எனக்கு எல்லாமுமே நீர் தானப்பா...
உம் அன்பு தான் எனக்கு வேண்டுமே...
அது ஒன்று மட்டும் எனக்கு போதுமே...
2. (மழையின் வருடலிலே வெளிப்படுமே மண் வாசனை...
உம் வருடலிலே சுகந்தமாகும் என் வாழ்க்கையே...) x 2
(கண்ணீர் சிந்தி நிற்கும் பாவி என் மீதிலே....) x 2
உம் கருணை மழையின் ஒரு சொட்டு நீர் போதுமே...நீர் போதுமே...
உம் கிருபையின் உச்சமே நான்...
அன்பை அளவின்றி பொழிந்தீரே...
(அருகதை இல்லாத என்னை...) x 2
(அள்ளியெடுத்து உச்சி முகர்ந்தீரே...) x 2
அப்பா அப்பா என் இயேசப்பா...
எனக்கு எல்லாமுமே நீர் தானப்பா...
உம் அன்பு தான் எனக்கு வேண்டுமே...
(அது ஒன்று மட்டும் எனக்கு போதுமே...) x 2
English
Um Kirubaiyin Uchchamay Naan | Maria Patricia
Reviewed by Christking
on
August 23, 2021
Rating:
No comments: