Udhavida Yarumillayae - உதவிட யாரும் இல்லையே | Enoch Gnanaraj | Joseph Gnanaraj - Christking - Lyrics

Udhavida Yarumillayae - உதவிட யாரும் இல்லையே | Enoch Gnanaraj | Joseph Gnanaraj


உதவிட யாரும் இல்லையே
என் இயேசய்யா
உதவிட நாதி இல்லையே- 2
உறவுகள் இல்லாமல் தவிக்கின்றேன்
உதவுவாரற்று நான்
திகைக்கின்றேன்
கண்ணோக்கி என்னை பாருமே
தேவா கருணையால் இறங்கிடுமே

1. தனிமையின் அனுபவம்
தினம்தோறும் பெரும் துயரம்
இந்த நிலை மாறுமோ
என்று மனம் ஏங்குதே -2
கண்ணோக்கி எனை பாருமே
தேவா கருணையாய் இறங்கிடுமே

2. தூங்காமல் இரவுகள்
தினம் தோறும் கடருதே
விழிகளில் நீர் துளி
விசாரிப்பார் யார் உண்டு -2
இந்த நிலை மாறுமோ
கண்ணோக்கி பாருமே
தேவா கருணையாய் இறங்கிடுமே

3. மரணத்தின் ஒலங்கள்
செவிகளில் தொனிக்குதே
தாங்கிட பெலனில்லை
தேற்றிட எவரும் இல்லை -2
கண்ணோக்கி எனை பாருமே
தேவா கருணையால் இறங்கிடுமே

உதவிகள் செய்பவரே
என் இயேசய்யா
உதவிடும் எங்களுக்கே- 2
பாவங்கள் பாராத
இயேசு மகா ராஜனே
இந்த பாவிக்காய்
சிலுவையிலே பலியான தெய்வமே
ஒரு விசை மனமிரங்குமே ஏசுவே
இந்த சூழ்நிலை மாற்றிடுமே
என் ஜனங்களை விடுவியுமே
எங்கள் தேசத்தை காப்பாற்றுமே
இரங்கும் மனமிரங்கும் -2
இயேசுவே மனமிரங்கும்
தெய்வமே மனமிரங்கும்

English


Udhavida Yarumillayae - உதவிட யாரும் இல்லையே | Enoch Gnanaraj | Joseph Gnanaraj Udhavida Yarumillayae - உதவிட யாரும் இல்லையே | Enoch Gnanaraj | Joseph Gnanaraj Reviewed by Christking on July 02, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.