Arpudharae - Pastor Solomon Robert | Maaratha Kirubai - Christking - Lyrics

Arpudharae - Pastor Solomon Robert | Maaratha Kirubai


அவர் தோள்களின் மேலே
நான் சாய்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே
அவர் வார்த்தையின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே

யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே-2

1. மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே
பயப்படமாட்டேன்-2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்கள் எழுந்தாலும்
அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே

2. நெருக்கத்திலே கர்த்தரை
நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டு வந்து
மீட்டுக்கொண்டாரே-2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான்
அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே

English


Arpudharae - Pastor Solomon Robert | Maaratha Kirubai Arpudharae - Pastor Solomon Robert | Maaratha Kirubai Reviewed by Christking on July 16, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.