Maha Maha Periyathu - மகா மகா பெரியது | Fr.S.J.Berchmans
Song | Maha Maha Periyathu |
Album | Single |
Lyrics | Fr.S.J.Berchmans |
Music | Alwyn. M |
Sung by | Fr.S.J.Berchmans |
- Tamil Lyrics
- English Lyrics
மகா மகா பெரியது உம் இரக்கம்
ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை
தேற்றிடும் கிருபை
உயிர்ப்பிக்கும் கிருபை
விலகாத மாறாத கிருபை
(கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம்
கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள்
மகா பெரியது. 2 சாமுவேல் 24:14)
1. மிகக் கொடிய வேதனையில்
இடுக்கண்கள் மத்தியில்
விழுந்து விட்டேன் உம் கரத்தில் - 2
கொள்ளைநோய் விலகனும்
ஜனங்கள் வாழனும்
உம் நாமம் உயரனுமே - 4
உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2
(ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில்
சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க்
கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். எபிரெயர் 4:16)
2. பெலவீனங்களைக் குறித்து
பரிதவிக்கும் மிகப்பெரிய
பிரதான ஆசாரியரே - 2
ஏற்ற வேளை உதவி செய்யும்
கிருபையை நான் நம்பியே
கிருபாசனம் வந்திருக்கிறேன் - 4
உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2
(பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப்
பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு
பெரிதாயிருக்கிறது. சங்கீதம் 103:11
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர்
நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். சங்கீதம் 103:11-12)
3. கிழக்கு மேற்கு உள்ள தூரம்
குற்றங்கள் அகற்றுகின்ற
கிருபையுள்ள நல்ல தகப்பனே - 2
பூலோகம் பரலோகம்
எவ்வளவு உயர்ந்ததோ
அவ்வளவு கிருபை உயர்ந்தது. -4
உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2
(தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின்
ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
பஞ்சத்தில் அவர்களை உயிரோடேகாக்கவும், கர்த்தருடைய
கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. சங்கீதம் 33:18:19)
4. திருப்பாதம் காத்திருந்து
மன்றாடும் பிள்ளைகள் மேல்
மனதுருகும் நல்ல தகப்பனே - 2
பஞ்சத்திலே பசியாற்ற
நோயிலிருந்து காப்பாற்ற
நோக்கமாய் இருப்பவரே - 4
உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2
English
Maha Maha Periyathu - மகா மகா பெரியது | Fr.S.J.Berchmans
Reviewed by Christking
on
June 10, 2021
Rating:
No comments: