Ini Naan Alla - இனி நான் அல்ல | Mohan Chinnasamy | Joel Thomasraj
Song | Ini Naan Alla |
Album | Single |
Lyrics | Mohan Chinnasamy |
Music | Joel Thomasraj |
Sung by | Mohan Chinnasamy |
- Tamil Lyrics
- English Lyrics
இனி நான் அல்ல என்னில் எல்லாம் இயேசுவே
இந்த வாழ்வும் எனதல்ல எனக்கெல்லாம் நீர்தானே
உங்க வல்லமையாலே என்னை நிரப்புமே
உங்க கிருபையாலே இன்னும் உயர்த்துமே
நித்தம் உந்தன் சத்தம் கேட்கிறேன் -உம்
சித்தம் செய்ய தத்தம் செய்கிறேன்
என்னை உம் கண்ணின்மணியை போல காத்திடும்
உம் காருண்யத்தால் வாழவைத்திடும்
-இனி நான் அல்ல
உடைந்த உள்ளம் உமக்காய் ஏங்குதே
உம் முகத்தை காண என் கண்களும் துடிக்குதே
என்னை உம் மகிமையின் மேகத்தாலே மூடிடும்
உங்க கிருபையாலே வாழவைத்திடும்
-இனி நான் அல்ல
அன்று விழுந்தும் இன்று எழும்பி நடக்கிறேன்
உம் கிருபையை எண்ணி அழுதே துதிக்கிறேன்
என்னை உம் பரிசுத்தாவியாலே நிரப்பிடும்
உங்க வார்த்தையாலே வாழவைத்திடும்
-இனி நான் அல்ல
English
Ini Naan Alla - இனி நான் அல்ல | Mohan Chinnasamy | Joel Thomasraj
Reviewed by Christking
on
June 07, 2021
Rating:
No comments: