Aaradikka - Tamil christian song - Christking - Lyrics

Aaradikka - Tamil christian song


ஆராதிக்க தெரிந்தெடுத்தீர்
கிருபையாக இரட்சித்தீர் – உயிர்
உள்ளவரை உம்மைப் பாடுவேன்
நான் உள்ளளவும் உம்மைத் துதிப்பேன்

எகிப்தில் இருந்து கூட்டி வந்தீர்
இடர்கள் எல்லாம் கடக்க செய்தீர்
எல்லாம் ஆராதிக்கத்தானே – உம்மை

பாவசாபம் எல்லாமே நீங்க செய்தீர்
பரிசுத்த ஜாதியாக மாற்றிவிட்டீர்
எல்லாம் ஆராதிக்கத்தானே – உம்மை

அந்தகார இருளிலிருந்து அழைத்து வந்தீர்
ஆச்சரிய ஒளிக்குள் அழைத்து சென்றீர்
எல்லாம் அராதிக்கத்தானே – உம்மை.

English


Aaradikka - Tamil christian song Aaradikka - Tamil christian song Reviewed by Christking on June 12, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.