Theevinai Seiyathea - தீவினை செய்யாதே | Voice of Eden - Christking - Lyrics

Theevinai Seiyathea - தீவினை செய்யாதே | Voice of Eden


1. தீவினை செய்யாதே மா சோதனையில்
பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில்
வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய்
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

Chorus
ஆற்றித் தேற்றியே காப்பார், நித்தம் உதவி செய்வார்
மீட்பர் பலனை ஈவார், ஜெயம் தந்திடுவார்

2. வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும்
சேராமலே நீங்கி நல்வழியிலும்
நின்றூக்கமும் அன்பும் சற்றேனும் விடாய்
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

3. மெய் நம்பிக்கையாலே வென்றேகினோன் தான்
பொற்கிரீடம் பெற்றென்றும் பேர்வாழ்வடைவான்
மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய்
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

English


Theevinai Seiyathea - தீவினை செய்யாதே | Voice of Eden Theevinai Seiyathea - தீவினை செய்யாதே | Voice of Eden Reviewed by Christking on April 02, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.