En Yeasuve - என் இயேசுவே | Sugan | Jegan
Song | En Yeasuve |
Album | Single |
Lyrics | Sugan |
Music | Cyrish Shelton |
Sung by | Jegan |
- Tamil Lyrics
- English Lyrics
என் இயேசுவே
உனையே பிரிந்த பாவி நான்
உன் அன்பையே
வாழ்வில் மறந்த பாவி நான்
எனக்காகப் பிறந்தீர்
என் பாவம் சுமந்தீர்
எனை மீட்டுப் புதுவாழ்வு தந்தீர்
என்னோடு இருந்தீர்
உம் அன்போடு அணைத்தீர்
இருந்தும் உணராமல் வாழ்ந்தேன்
நான் பாவியே இயேசுவே
என் மேல் இரங்கும்
உனை நம்பியே வருகிறேன்
என்னை மன்னியும் (2)
பாவம் சூழ்ந்த உலகில் நுழைந்தேன்
தெரிந்தும் தொடர்ந்தேன்
உன் உறவை இழந்தேன்
அனைத்தும் கிடைத்தேன்
தனியாய் நின்றேன்
உம்மை அறிந்தேன்
என் தவறை உணர்ந்தேன்
உனை அப்பா என சொல்லும்
தகுதியை நான் இழந்தேன்
உம்மோடு உறவாட உனைத் தேடினேன்
உன் கையோடு கை கோர்த்து
நடந்திடவே துடித்தேன்
என் வாழ்வை உன் கையில்
தந்திட விரைந்தேன்
நான் பாவியே இயேசுவே
என் மேல் இரங்கும்
உனை நம்பியே வருகிறேன்
என்னை மன்னியும் (2)
என் இயேசுவே
உனையே பிரிந்த பாவி நான்
உன் அன்பையே
வாழ்வில் மறந்த பாவி நான்
எனக்காகப் பிறந்தீர்
என் பாவம் சுமந்தீர்
எனை மீட்டுப் புதுவாழ்வு தந்தீர்
என்னோடு இருந்தீர்
உம் அன்போடு அணைத்தீர்
இருந்தும் உணராமல் வாழ்ந்தேன்
நான் பாவியே இயேசுவே
என் மேல் இரங்கும்
உனை நம்பியே வருகிறேன்
என்னை மன்னியும் (2)
English
En Yeasuve - என் இயேசுவே | Sugan | Jegan
Reviewed by Christking
on
April 02, 2021
Rating:
No comments: