Poovodu Pesum Thendral - பூவோடு பேசும் தென்றல் | Vasanthy Prince - Christking - Lyrics

Poovodu Pesum Thendral - பூவோடு பேசும் தென்றல் | Vasanthy Prince


பூவோடு பேசும் தென்றல் கரையோடு மோதும் அலைகள்
காதோரம் சொல்வதென்னவோ என் தேவனை
நாள்தோறும் துதிப்பதல்லவோ என் தேவனை
நாள்தோறும் துதிப்பதல்லவோ

வார்த்தையினாலே உலகத்தப் படைத்தார்
வலது கை நீட்டினார் வானங்கள் அளப்பார்
மூச்சுக் காற்றாலே சமுத்திரம் பிளப்பார்
மலைகளைக் கூட தூக்கியே நிறுப்பார்
யாரு என் தேவன் பாரு பெரியவர் பாடு

பூமியின் தூளை மரக்காலால் அடக்கி
தண்ணீர்களைத் தன் கரங்களில் பிடிப்பார்
வானங்களை ஒரு சால்வை போல் சுருட்டி
விண்மீன்களை அவர் பெயர் சொல்லி அழைப்பார்
யாரு என் தேவன் பாரு பெரியவர் பாடு

பர்வதங்கள் அவர் பிரசன்னத்தில் உருகும்
சகல சிருஷ்டியும் அவர் கரம் நோக்கும்
இத்தனை பெரிய தேவனின் கண்கள்
என்னையே பார்க்கும் அதிசயம் பாரு
பாரு சிலுவையில் பாரு இயேசுவைப் பாடு

English


Poovodu Pesum Thendral - பூவோடு பேசும் தென்றல் | Vasanthy Prince Poovodu Pesum Thendral - பூவோடு பேசும் தென்றல் | Vasanthy Prince Reviewed by Christking on March 26, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.