Neerae - நீரே | Madhan Mathew - Christking - Lyrics

Neerae - நீரே | Madhan Mathew


நீரே நீரே எங்கள் இராஜா
உம்மைப்போல் ஒருவரும் இல்லை-2
தாயும் இல்ல தந்தையும் இல்ல
பாதுக்காக்க உறவும் இல்ல
நீங்க மட்டும் கூட இருந்தா
எனக்கு ஒரு குறையும் இல்லை-2-நீரே

1.பாதுகாத்து தான் அழைச்சி
பரமன் இயேசு நடத்திடுவார்
வழியையும் பாதையையும்
செம்மையாய் மாற்றிடுவார்-2

உத்தமும் சத்தியமும்
உண்மையுமுமானவரே
நிச்சயமாய் என்னை கொண்டு
சேர்த்திடுவார் மகிமையிலே-2

செங்கடல் தான் எந்தன் பாதையிலே
பார்வோன் சேனை எந்தன் பின்னாலே
செங்கடலை தான் பிளந்து
கிருபையால் என்னை நடத்துவார் அவரே

2.மாயமான உலகத்திலே
நியாயமில்லா சமூகத்திலே
நீதிபரர் இயேசு இராஜன்
நிச்சயமாய் காத்திடுவார்-2

வழியை நீ கர்த்தருக்கு
ஒப்புவித்து காத்திருந்தால்
காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்
கரம் பற்றி நடத்திடுவார்-2

எக்கால தொனியும் கேட்டிடுதே
எரிகோ கோட்டையும் அசைந்திடுதே
கஷ்டம் எல்லாம் நீங்கிடுதே
அவர் வருகையின் நாட்களில்
என்னை அழைத்திடுவார் இயேசுவே-நீரே


English


Neerae - நீரே | Madhan Mathew Neerae - நீரே | Madhan Mathew Reviewed by Christking on March 19, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.