En Muzhumaiyum - என் முழுமையும் | Robert Roy With Ben Samuel - Christking - Lyrics

En Muzhumaiyum - என் முழுமையும் | Robert Roy With Ben Samuel


என் முழுமையும் அது உமக்குத்தான்
தேவா நீர் எடுத்துக்கொள்ளும்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன்
புதிதாக்கும் புதிதாக்கும்-2

தேவனே என் தேவனே
என்னையே தருகிறேன்
உந்தன் பின் நான் வந்திட
அர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும்

உம் பணி செய்திட தான்
என்றென்றும் விரும்புகிறேன்
அதற்கான தகுதிகளை
நீரே தாரும் ஐயா-2

என் ஜீவன் இருக்குமட்டும்
உம் சேவை செய்திடனும்-2
தருகிறேன் தருகிறேன்
ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும்

என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
உருவாக்குமே உருவாக்குமே-2

குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும்-2
என் சித்தம் அல்ல... உம் சித்தம் நாதா...
தருகிறேன் உம் கைகளில்-2

உமக்காகவே நான் வாழ்கிறேன்
வணைந்திடும் உம் சித்தம் போல்-2
எனக்காக வாழாமல்
உமக்காகவே வாழ்ந்திட-2
உருவாக்குமே உருவாக்குமே-2

என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
உருவாக்குமே உருவாக்குமே-2

உம் சேவைக்காய் என்னை தருகிறேன்
வணைந்திடும் உம் சித்தம் போல்-2
உம் சித்தம் செய்திடவே
உம் சத்தம் கேட்டிடவே-2
உருவாக்குமே உருவாக்குமே-2

என்னை தருகிறேன் தருகிறேன் உம் கைகளில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
உருவாக்குமே உருவாக்குமே-2

இயேசுவே......
உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
வழுவாமல் என்றும் நடப்பேன்
உம்மை என்றும் பற்றிக்கொள்ளுவேன்
என் வாழ்வில் எல்லாம் நீர் தானே-4

English


En Muzhumaiyum - என் முழுமையும் | Robert Roy With Ben Samuel En Muzhumaiyum - என் முழுமையும் | Robert Roy With Ben Samuel Reviewed by Christking on March 23, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.