Thangamum Dhubavargamum - தங்கமும் தூபவர்க்கமும் | Benny Joshua | Samy Pachigalla - Christking - Lyrics

Thangamum Dhubavargamum - தங்கமும் தூபவர்க்கமும் | Benny Joshua | Samy Pachigalla


Scale: G

தங்கமும் தூபவர்க்கமும்
வெள்ளைப்போளம் காணிக்கைகளும்
இயேசப்பா விரும்பவில்லையே
உன் ஐஸ்வர்யமும் பேர் புகழும் நிறமும்
உந்தன் தோற்றங்களும்
முதன்மையானதல்ல முக்கியமல்லவே

பலிகளை பார்க்கிலும்
கீழ்ப்படிதலே மேன்மை
அர்ப்பணித்திடு உந்தன் இதயத்தை-தங்கமும்

1.எளிய ஊராய் இருந்த பெத்லகேமிலிருந்து
எழும்பின யூத சிங்கமே
எளியவளாய் இருந்த மரியின் கருவிலிருந்து
உதித்த ஜீவ வார்த்தையே

மானிடனானார் மகிமை நிறைந்தவர்
பூமிக்கு இரட்சிப்பு தந்தவர்-2-தங்கமும்

2.சொந்த பிள்ளையென்றும் பாராமல் இயேசுவை
நமக்காய் ஒப்புக்கொடுத்தார்
அவரோடு கூட அனைத்தும் நமக்களிப்பார்
கடைசி நாள் வரைக்கும்

பாவமானார் பரிசுத்தர் இயேசு
பாவிக்கு மேன்மையை தருபவர்-2-தங்கமும்


English


Thangamum Dhubavargamum - தங்கமும் தூபவர்க்கமும் | Benny Joshua | Samy Pachigalla Thangamum Dhubavargamum - தங்கமும் தூபவர்க்கமும் | Benny Joshua | Samy Pachigalla Reviewed by Christking on December 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.