Boomikoru Punitham - பூமிக்கொரு புனிதம் | Rev. Alwin Thomas
Song | Boomikoru Punitham |
Album | Single |
Lyrics | Ps. Alwin Thomas |
Music | Alwin Thomas,Giftson Durai |
Sung by | Alwin Thomas |
- Tamil Lyrics
- English Lyrics
பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது
உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது
பரலோக தந்தையின் செல்லம் வந்தது
மண்ணான என்னையும் தேடி வந்தது
அகிலத்தைப் படைத்தவர் அணுவானது
அறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2
எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜா
கன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார்
1. எளியோனை நேசித்த மாமன்னவர்
ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோ
அறிஞரின் ஞானத்தை அவமாக்கியே
புல்லணை மீதினில் பிறந்தாரன்றோ
உலகத்தின் பாவத்தை தாம் போக்கவே
தேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ & 2
விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம்
2. இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவே
விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோ
மருளாலே கட்டுண்டோர் விடுவிக்கவே
அருளாலே உதிரத்தை ஈந்தாரன்றோ
பரலோகில் நம்மை சேர்க்க தமை தாழ்த்தியே
சிலுவையில் ஜீவனைத் தந்தாரன்றோ & 2
இரட்சகர் இயேசுவைக் கொண்டாடுவோம்
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயாவே & 3
Boomikoru Punitham Immannil Vanthathu
Ullamellam Santhosham Indru Ponguthu
Paraloga Thanthaiyin Chellam Vanthathu
Mannaana Ennaiyum Thedi Vanthathu
Agilathai Padaithavar Anuvaanathu
Arivukketta Perum Vinthaiyithu - 2
1. Yeliyonai Nesitha Maamannavar
Yezhaiyin Kolathil Piranthaarandro
Aringarin Gnaanathai Avamaakkiye
Pullanai Meethinil Piranthaarandro
Ulagathin Paavathai Tham Pokkavae
Dhevaattukuttiyaai Piranthaarandro - 2
Vinthaiyaam Yesuvai Kondaduvom
2. Irulaana Nam Vaazhvil Oliyetravae
Vidivelli Natchathram Uthithaarandro
Marulaale Kattundor Viduvikkavae
Arulaale Uthiraththai Intharandro
Paralogil Namai Serkka Thamai Thazhthiyae
Siluvaiyil Jeevanai Thanthaarandro -2
Ratchagar Yesuvai Kondaduvom
Alleluyaa Hosanna Alleluyaavae - 3
Boomikoru Punitham - பூமிக்கொரு புனிதம் | Rev. Alwin Thomas
Reviewed by Christking
on
December 20, 2020
Rating:
No comments: