Arivukku Ettadha Anbu - அறிவுக்கு எட்டாத அன்பு | John Selvaraj
Song | Arivukku Ettadha Anbu |
Album | Single |
Lyrics | Eva. John Selvaraj |
Music | Blessy Catherine |
Sung by | Sis. Raji L Rajan |
- Tamil Lyrics
- English Lyrics
அறிவுக்கு எட்டாத அன்பு
என் இயேசுவின் அன்பு
அளந்திட முடியாத அன்பு
என் இயேசுவின் அன்பு - 2
பாவிக்காய் ஜீவனை இழந்த அன்பு
பாரசிலுவையை சுமந்த அன்பு
இது ஈடற்ற இணையற்ற
இதயத்தின் அன்பு -2
என் இயேசுவின் அன்பு
1. மாறாத அன்பு மறவாத அன்பு
தீராத அன்பு திகட்டாத அன்பு
இது குறையாத அன்பு
மறையாத அன்பு கடல் வற்றி
போனாலும் வற்றாத அன்பு
என் கர்த்தரின் பேரன்பு
- அறிவுக்கு எட்டாத
2. நிஜமான அன்பு நீடித்த அன்பு
உயிரான அன்பு உறவான அன்பு
இது அணைக்கின்ற அன்பு
நினைக்கின்ற அன்பு
ஆகாயம் அழிந்தாலும் அழியாத அன்பு
என் ஆண்டவர் பேரன்பு
- அறிவுக்கு எட்டாத
English
Arivukku Ettadha Anbu - அறிவுக்கு எட்டாத அன்பு | John Selvaraj
Reviewed by Christking
on
December 16, 2020
Rating:
No comments: