Nampikkai Nanguram - நம்பிக்கை நங்கூரம் - Christking - Lyrics

Nampikkai Nanguram - நம்பிக்கை நங்கூரம்


நம்பிக்கை நங்கூரம், நான் நம்பும் தெய்வமே
நம்பினோரைக் காக்கும் இயேசுவே – பரம
பரிசுத்த தேவனை, பரலோக ராஜனை
பாடல் பாடி கொண்டாடிடுவோம் (2)

நம்பிக்கை நீர் தானே, நங்கூரம் நீர் தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே! (2) நீர்தானே

1. பார்வோனை வென்றவரை துதிப்போம்
எகிப்தியரை வென்றவரைத் துதிப்போம், ஆயிரம்
பார்வோன்கள் வந்தாலும், எகிப்தியர் வந்தாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் — நம்பிக்கை

2. கன்மலையைப் பிளந்தவரைத் துதிப்போம்
நீரூற்றைத் தந்தவரைத் துதிப்போம், பஞ்சம்
பட்டினியே வந்தாலும், வறட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் — நம்பிக்கை

3. கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம்
மரணத்தை வென்றவரைத் துதிப்போம், மரண
இருளுள்ள பள்ளத்தாக்கின், சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம் — நம்பிக்கை


Nampikkai Nangauram, Naan Nampum Theyvamae
Nampinoraik Kaakkum Yesuvae – Parama
Parisuththa Thaevanai, Paraloka Raajanai
Paadal Paati Konndaadiduvom (2)

Nampikkai Neer Thaanae, Nangauram Neer Thaanae
Naangal Nampum Theyvam Neerthaanae! (2) Neerthaanae

1. Paarvonai Ventavarai Thuthippom
Ekipthiyarai Ventavaraith Thuthippom, Aayiram
Paarvonkal Vanthaalum, Ekipthiyar Vanthaalum
Paadal Paati Munnaeriduvom — Nampikkai

2. Kanmalaiyaip Pilanthavaraith Thuthippom
Neeroottaith Thanthavaraith Thuthippom, Panjam
Pattiniyae Vanthaalum, Varatchikal Entalum
Paadal Paati Munnaeriduvom — Nampikkai

3. Kallaraiyaip Pilanthavaraith Thuthippom
Maranaththai Ventavaraith Thuthippom, Marana
Irululla Pallaththaakkin, Soolnilaikal Vanthaalum
Payaminti Munnaeriduvom — Nampikkai

Nampikkai Nanguram - நம்பிக்கை நங்கூரம் Nampikkai Nanguram - நம்பிக்கை நங்கூரம் Reviewed by Christking on November 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.