Uyirodirukkum Mattum | Rajan | Shirleyrajan - Christking - Lyrics

Uyirodirukkum Mattum | Rajan | Shirleyrajan



உயிரோடிருக்குமட்டும் கர்த்தரை பாடுவேன்
உள்ளளவும் என் தேவனை கீர்த்தனம் பண்ணுவேன்-2

1.காற்றையும் காணல
மழையையும் காணல
வாய்க்கால வெட்டிட்டேன்
தண்ணீரால நிரப்புங்க-2
கையளவு மேகம் இருந்தா போதுமே
எங்க வாழ்க்கை எல்லாம் செழிப்பா மாறுமே-2

2.சூழ்நிலையை பாக்குறேன்
சோர்ந்து போகுறேன்
உங்களை நம்புறேன்
எனக்கு உதவி செய்யுங்க-2
வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவரே
உம் வார்த்தையினாலே பிழைக்க செய்யுமே-2

3.நிற்க பெலன் இல்ல
என்ன செய்வது புரியல
உங்க கரத்தால் பிடியுங்க
என்னை நடத்தி செல்லுங்க-2
அடைக்கல பட்டணம் எனக்கு நீர் தானே
நீதிமான் அதற்குள் சுகமாய் இருப்பானே-2
-உயிரோட்டிருக்குமட்டும்


English


Uyirodirukkum Mattum | Rajan | Shirleyrajan Uyirodirukkum Mattum | Rajan | Shirleyrajan Reviewed by Christking on October 09, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.