Ratchagara - இரட்சகரே | Bro.Binni Dovasco - Christking - Lyrics

Ratchagara - இரட்சகரே | Bro.Binni Dovasco



இரட்சகரே இரட்சகரே
இரட்சகரே இயேசு நாதா
மாயையான உலகினில்
சிக்கி நான் தவித்தேனே
பாசமாக வந்திறங்கி
பாலா என்னை மீட்டீரே

இனி வேண்டாம் இனி வேண்டாம்
இந்த உலகம் இனி வேண்டாம்
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு மாத்திரம் போதும்-2

1.அழகு மாயை செல்வம் எல்லாம் மாயை
பதவி மாயை காணும் எல்லாம் மாயை-2
நித்தியமானவரே பற்றிடுவேன் உம்மையே-2
சார்ந்து வாழ்ந்திடுவேன்
உமது சமுகத்திலே-இயேசுவே-2
-இனி வேண்டாம்

2.முந்தினவைகளை நான் நினைக்கவில்லை
பூர்வமானதை சிந்திக்கவும் இல்லை-2
திறந்த வாசலை எனக்கு முன்பாய்
வைத்த தேவன் நீரல்லோ-2

உம்மையே சார்ந்திடுவேன்- நான்
உமக்காக வாழ்ந்திடுவேன்-2
-இனி வேண்டாம்


English


Ratchagara - இரட்சகரே | Bro.Binni Dovasco Ratchagara - இரட்சகரே | Bro.Binni Dovasco Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.