Meetpar Yesu Kurisil - மீட்பர் இயேசு குருசில்
- TAMIL
- ENGLISH
மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே
மூன்றாணி மீதில் காயம் அடைந்தே
லோகப் பாவம் தீர்க்க பலியான
தேவ ஆட்டுக் குட்டியானவர்
சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு
இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் -எம்மில்
இயேசுவே கல்வாரி சிலுவையில்
ஏறி ஜீவன் தந்திராவிடில் – ஏழையான்
என் பாவ பாரங்களை எங்கு
சென்று தீர்த்துக் கொள்ளுவேன் – பூவில்
தேவனே என்னை ஏன் கைவிட்டீரோ
என்று இயேசு கதறினாரே
பாவத்தால் பிதாவின் முகத்தையும்
பார்க்கவும் முடியவில்லையோ – அவர்
அன்னை தந்தை யாவரிலும் மேலாய்
அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே
ஆச்சரிய தேவ அன்பைப் பாட – ஆயிரம்
நாவுகள் போதுமோ – பதினாயிரம்
பாவ பாரம் லோகக் கவலைகள்
தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும்
தேடி நாடி ஓடி வந்தால் உன்னைத் தேற்றி
ஆற்றித் தாங்குவார் அவர் – இப்போ
கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால்
கல் மனமும் உருகிடுமே
மாய லோக ஆசை வஞ்சிக்குமே
மாறிடாத இயேசு போதுமே – என்றும்
Meetpar Yesu Kurusil Thonginaarae
Moontanni Meethil Kaayam Atainthae
Lokap Paavam Theerkka Paliyaana
Thaeva Aattuk Kuttiyaanavar
Sonthamaana Iraththam Sinthi Meettu
Inthalavaay Anpu Koornthavar -emmil
Yesuvae Kalvaari Siluvaiyil
Aeri Jeevan Thanthiraavitil – Aelaiyaan
En Paava Paarangalai Engu
Sentu Theerththuk Kolluvaen – Poovil
Thaevanae Ennai Aen Kaivittiro
Entu Yesu Katharinaarae
Paavaththaal Pithaavin Mukaththaiyum
Paarkkavum Mutiyavillaiyo – Avar
Annai Thanthai Yaavarilum Maelaay
Anpu Koornthaar Annnal Yesuvae
Aachchariya Thaeva Anpaip Paada – Aayiram
Naavukal Pothumo – Pathinaayiram
Paava Paaram Lokak Kavalaikal
Thaavi Unnaich Soolntha Pothilum
Thaeti Naati Oti Vanthaal Unnaith Thaetti
Aattith Thaanguvaar Avar – Ippo
Koramaam Siluvaik Kaatchi Kanndaal
Kal Manamum Urukidumae
Maaya Loka Aasai Vanjikkumae
Maaridaatha Yesu Pothumae – Entum
Meetpar Yesu Kurisil - மீட்பர் இயேசு குருசில்
Reviewed by Christking
on
October 23, 2020
Rating:
No comments: