Maha Menmaium - மகா மேன்மையும்
- TAMIL
- ENGLISH
மகா மேன்மையும் அருமையுமான
வாக்குத்தத்தங்களைக் கொடுத்து
உந்தன் ஆசீர்வாதம்
என் மேல் தங்கச் செய்தீரே
உந்தன் அன்பை பாடி புகழ்ந்திடுவேன்
என் ஜீவன் நீரே உம்மைத் துதிப்பேன்
ஆராதிக்கின்றேன் என் நல்ல பிதாவே
ஆராதிக்கின்றேன் என் மீட்பர் இயேசுவே
ஆராதிக்கின்றேன் ஆவியானவரே
சென்ற இடமெல்லாம் கூட வந்தவரே
செய்த எல்லாவற்றிலும் பலன் தந்தீரே
ஜெபங்களுக்கெல்லாம் பதில் தந்தீரே
தேவைகளை பூரணமாய் பூர்த்தி செய்தீரே
செம்மையான பாதையில் என்னை நடத்தி
சேதமின்றி காத்துக்கொண்டீரே
ஆவியோடும் உண்மையோடும் நான்
உம்மை ஆராதிப்பேன் ஆயுள் முழுதும்
கவலைகள் சூழ்ந்த எல்லா நேரங்களிலும்
ஆறுதல் பெலன் தரும் வார்த்தை தந்தீரே
வியாதியில் தெய்வீக சுகம் தந்தீரே
விசுவாச போராட்டத்தில் ஜெயம் தந்தீரே
நல்ல தேவன் உம்மைப்போலவே இந்த
பாரில் வேறு யாருமில்லையே
வல்லவரே பெரியவரே
எந்தன் மேன்மைக்கு காரணரே
இந்த புவி வாழ்க்கையில்
உமக்காய் வாழ்வேன்
உந்தன் வார்த்தை சத்தியத்தில்
நிலைத்திருப்பேன் கனம் பண்ணுவேன்
உந்தன் வேலை செய்வதை
மேலாய் எண்ணுவேன்
கனிகள் உள்ள கொடியாய்
நான் உமக்காக படர்ந்திடுவேன்
உந்தன் நாமம் மகிமைப்பட நான்
எல்லா நாளும் உயர்ந்திருப்பேன்
Makaa Maenmaiyum Arumaiyumaana
Vaakkuththaththangalaik Koduththu
Unthan Aaseervaatham
En Mael Thangach Seytheerae
Unthan Anpai Paati Pukalnthiduvaen
En Jeevan Neerae Ummaith Thuthippaen
Aaraathikkinten en Nalla Pithaavae
Aaraathikkinten en Meetpar Yesuvae
Aaraathikkinten Aaviyaanavarae
Senta Idamellaam Kooda Vanthavarae
Seytha Ellaavattilum Palan Thantheerae
Jepangalukkellaam Pathil Thantheerae
Thaevaikalai Pooranamaay Poorththi Seytheerae
Semmaiyaana Paathaiyil Ennai Nadaththi
Sethaminti Kaaththukkonnteerae
Aaviyodum Unnmaiyodum Naan
Ummai Aaraathippaen Aayul Muluthum
Kavalaikal Soolntha Ellaa Naerangalilum
Aaruthal Pelan Tharum Vaarththai Thantheerae
Viyaathiyil Theyveeka Sukam Thantheerae
Visuvaasa Poraattaththil Jeyam Thantheerae
Nalla Thaevan Ummaippolavae Intha
Paaril Vaetru Yaarumillaiyae
Vallavarae Periyavarae
Enthan Maenmaikku Kaaranarae
Intha Puvi Vaalkkaiyil
Umakkaay Vaalvaen
Unthan Vaarththai Saththiyaththil
Nilaiththiruppaen Kanam Pannnuvaen
Unthan Vaelai Seyvathai
Maelaay Ennnuvaen
Kanikal Ulla Kotiyaay
Naan Umakkaaka Padarnthiduvaen
Unthan Naamam Makimaippada Naan
Ellaa Naalum Uyarnthiruppaen
Maha Menmaium - மகா மேன்மையும்
Reviewed by Christking
on
October 13, 2020
Rating:
No comments: