Maasarra Thuuyanal Anpae - மாசற்ற தூயநல் அன்பே
- TAMIL
- ENGLISH
மாசற்ற தூயநல் அன்பே அன்பே
மாறிடா மங்கிடா அன்பே அன்பே
காலத்தில் அடங்கா ஞாலத்தில் சிறந்த
உள்ளம் உடைக்கும் அன்பே!
1. எருசலேம் தெருக்களில் ஓலம் ஏன்?
கொல்கதா மலையில் கூட்டம் ஏன்?
என்னைத் திருத்திட என் அன்பு சாகுதே
ஓ நல்ல தேவ அன்பே!
2. சிலுவையின் அடியில் இரத்தக் கறை
என் உள்ளக் கறையை கழுவவோ!
ஏனையா இத்தனை என் மீது அக்கறை
ஓ நல்ல தேவ அன்பே!
3. நேசத்திற்கெதிராய் ஒன்றும் செய்யேன்
அன்பிற்கு அடிமை ஆகுகின்றேன்
என்யாவும் அன்பிற்கே! என் எல்லாம் அன்பிற்கே
உள்ளம் மகிழ்கின்றேனே.
Maasarra Thuuyanal Anpae Anpae
Maaritaa Mankitaa Anpae Anpae
Kaalaththil Atankaa Gnaalaththil Sirantha
Ullam Utaikkum Anpae!
1. Erusalaem Therukkalil Oolam Aen?
Kolkathaa Malaiyil Kuuttam Aen?
Ennaith Thiruththita En Anpu Saakuthae
Oo Nalla Thaeva Anpae!
2. Siluvaiyin Atiyil Iraththak Karai
En Ullak Karaiyai Kazhuvavoe!
Aenaiyaa Iththanai En Meethu Akkarai
Oo Nalla Thaeva Anpae!
3. Naesaththirkethiraay Onrum Seyyaen
Anpirku Atimai Aakukinraen
Enyaavum Anpirkae! En Ellaam Anpirkae
Ullam Makizhkinraenae.
Maasarra Thuuyanal Anpae - மாசற்ற தூயநல் அன்பே
Reviewed by Christking
on
October 10, 2020
Rating:
No comments: