Kirupai Erakkam Nirainthavoor - கிருபை இரக்கம் நிறைந்தவோர்
- TAMIL
- ENGLISH
கிருபை இரக்கம் நிறைந்தவோர்
கிருபாசனம் ஆ தோன்றிடுதே
தருணமேதும் என்கிலும் நல்ல
சகாயம் பெற்றிட ஏற்றதுவே
கிருபையே பெருகுதே
கல்வாரியினின்றும் பாய்ந்திடுதே
என்னுள்ளம் நன்றியால்
பொங்கி வழியிதே
என்ன என் பாக்கியமிதே
2. நம்மைப் போலவே
சோதிக்கப்பட்டும் நாதனோர்
பாவமும் அற்றவராய்
நாளும் நம் குறைகள் கண்டுருகும்
நல்ல ஆசாரியர் நமக்குண்டே
3. நம் பெலவீனத்தில் அவர் பெலன்
நல்கிடுவார் பரிபூரணமாய்
நாடுவோமே மாறா கிருபையை
நமக்காயே யவர் ஜீவிப்பதால்
4. வானங்களின் வழியாய் பரத்தில்
தானே சென்ற இயேசுவாமெமது
மா பிரதான ஆசாரியரைப்
பற்றிடுவோம் நோக்கி
நம்பிக்கையே
5. பிதாவண்டை சேரும்
சுத்தர்கட்காய் சதா பரிந்து
பேசியே நிற்பார்
இதோ எம்மையே முற்றுமுடிய
இரட்சிக்க
வல்லமையுள்ளவரே
Kirupai Irakkam Nirainthavor
Kirupaasanam Aa Thontiduthae
Tharunamaethum Enkilum Nalla
Sakaayam Pettida Aettathuvae
Kirupaiyae Perukuthae
Kalvaariyinintum Paaynthiduthae
Ennullam Nantiyaal
Pongi Valiyithae
Enna en Paakkiyamithae
2. Nammaip Polavae
Sothikkappattum Naathanor
Paavamum Attavaraay
Naalum Nam Kuraikal Kanndurukum
Nalla Aasaariyar Namakkunntae
3. Nam Pelaveenaththil Avar Pelan
Nalkiduvaar Paripooranamaay
Naaduvomae Maaraa Kirupaiyai
Namakkaayae Yavar Jeevippathaal
4. Vaanangalin Valiyaay Paraththil
Thaanae Senta Yesuvaamemathu
Maa Pirathaana Aasaariyaraip
Pattiduvom Nnokki
Nampikkaiyae
5. Pithaavanntai Serum
Suththarkatkaay Sathaa Parinthu
Paesiyae Nirpaar
Itho Emmaiyae Muttumutiya
Iratchikka
Vallamaiyullavarae
Kirupai Erakkam Nirainthavoor - கிருபை இரக்கம் நிறைந்தவோர்
Reviewed by Christking
on
October 07, 2020
Rating:
No comments: