Karththarilum Tham Vallamaiyilum - Christking - Lyrics

Karththarilum Tham Vallamaiyilum


1. கர்த்தரிலும் தம் வல்லமையிலும்
கிருபையால் அனைவரும் பலப்படுவோம்
தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று
திராணியுடன் போர் புரிவோம்

சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக்கொள்வோம்
சாத்தானின் சேனையை முறித்திடுவோம் – அவர்
சத்துவ வல்லமையால்

2. மாமிசம் இரத்தத்துடனுமல்ல
துரைத்தனம் அதிகாரம் அந்தகாரத்தின்
லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும்
போராட்டம் நமக்கு உண்டு
– சர்வாயுத

3. சத்தியமாம் கச்சையை கட்டியே
நீதியின் மார்க்கவசம் தரித்தே
சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை
நாம் கால்களில் தொடுத்துக்கொள்வோம்
– சர்வாயுத

4. பொல்லாங்கன் எய்யும் அம்புகளை
வல்லமையோடும் எதிர்க்கும் ஆயுதம்
விசுவாசம் என்னும் கேடகம் மேலே
வீரமுடன் பிடித்து நிற்போம்
– சர்வாயுத

5. இரட்சண்யமாம் தலைச்சீராவும்
எச்சனமும் அணிந்துகொள்வோம்
தேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம்
தேவை அதைப்பிடித்துக்கொள்வோம்
– சர்வாயுத

5. எந்தச் சமயத்திலும் சகல
வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்
பரிசுத்தர்கட்காக ஆவியினால்
மனஉறுதியுடன் ஜெபிப்போம்
– சர்வாயுத


1. Karththarilum Tham Vallamaiyilum
Kirupaiyaal Anaivarum Palappaduvom
Theengu Naalilae Saaththaanai Ethirththu Nintu
Thiraanniyudan Por Purivom

Sarvaayutha Varkkaththai Eduththukkolvom
Saaththaanin Senaiyai Muriththiduvom – Avar
Saththuva Vallamaiyaal

2. Maamisam Iraththaththudanumalla
Thuraiththanam Athikaaram Anthakaaraththin
Lokaathipathiyodum Pollaa Aaviyodum
Poraattam Namakku Unndu
– Sarvaayutha

3. Saththiyamaam Kachchayai Kattiyae
Neethiyin Maarkkavasam Thariththae
Samaathaanaththin Suvisesha Paatharatcha
Naam Kaalkalil Thoduththukkolvom
– Sarvaayutha

4. Pollaangan Eyyum Ampukalai
Vallamaiyodum Ethirkkum Aayutham
Visuvaasam Ennum Kaedakam Maelae
Veeramudan Pitiththu Nirpom
– Sarvaayutha

5. Iratchannyamaam Thalaichcharaavum
Echchanamum Anninthukolvom
Thaeva Vasanamennum Aaviyin Pattayam
Thaevai Athaippitiththukkolvom
– Sarvaayutha

5. Enthach Samayaththilum Sakala
Vaennduthalodum Vinnnappaththodum
Parisuththarkatkaaka Aaviyinaal
Manauruthiyudan Jepippom
– Sarvaayutha

Karththarilum Tham Vallamaiyilum Karththarilum Tham Vallamaiyilum Reviewed by Christking on October 03, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.