Eliyaavin Naatkalil - எலியாவின் நாட்களில் | Pr.R. Reegan Gomez - Christking - Lyrics

Eliyaavin Naatkalil - எலியாவின் நாட்களில் | Pr.R. Reegan Gomez



எலியாவின் நாட்களில்
பெரும் காரியம் செய்த தேவன்
எங்களின் இந்த நாட்களில்
பெரும் காரியம் செய்திடுவார்

எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்
அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

1. அதிகார அரியணையில்
அமர்ந்திருந்தோர் அலறி நின்றார்
ஆவியில் அனல் கொண்ட எலியா
அஞ்சாமல் நிமிர்ந்து நின்றார்

2. காகங்களைக் கொண்டு
கர்த்தர் எலியாவை போஷித்தாரே
மரித்திட்ட விதவையின் மகனை
உயிரோடு எழும்பச் செய்தாரே

3. பனிமழை நிறுத்திடவும்
பெருமழை பெய்யப்பண்ணவும்
அதிகாரம் தந்தார் தேவன்
தம் தாசன் எலியாவுக்கு

4. பாகாலின் கூட்டமெல்லாம்
பதில் இல்லாமல் தலைகுனிந்தார்
பாகால் தெய்வமே அல்ல – என்று
நம் தேவன் நிரூபித்தார்

5. செப்பனிட்ட பலிபீடத்தில்
தேவ அக்கினி இறங்கியதே
கர்த்தரே தெய்வம் என்று
தேவ ஜனங்கள் பணிந்தனரே

6. இரட்டிப்பான வரங்கள் பெற்ற
தேவ தலைமுறை எழும்பிடவே
தேவனின் முன்னே நிற்போம்
நம் இயேசுவை உயர்த்திடுவோம்

7. சோர்ந்திட்ட எலியாவை
கர்த்தர் தூக்கி நிறுத்தினரே
பிரயாணம் வெகு தூரம் உண்டு
என்று சொல்லி ஓட வைத்தாரே

8. பரலோக ரதம் வந்திடும்
மகிமையில் நம்மை சேர்த்திடும்
ஆயத்தமாகிடுவோம் நாம்
அன்பர் இயேசுவை சந்திக்கவே


English


Eliyaavin Naatkalil - எலியாவின் நாட்களில் | Pr.R. Reegan Gomez Eliyaavin Naatkalil - எலியாவின் நாட்களில் | Pr.R. Reegan Gomez Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.