Vazhi Ellam - வழி எல்லாம் | Ebenezer |Jack Warrior - Christking - Lyrics

Vazhi Ellam - வழி எல்லாம் | Ebenezer |Jack Warrior



வழி எல்லாம் துணையாக
வந்த தெய்வமே
விழி இமைக்காமல் இரவெல்லாம்
காத்த தெய்வமே-2
உம் புகழ் பாட வந்தோம்
புகலிடம் நீர்தானையா
உம்மையே போற்ற வந்தோம்
புதுவாழ்வு தந்தீரய்யா-2

ஆராதனை ஆராதனை
அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே
ஆராதனை ஆராதனை
தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி

1.வறட்சியே எங்கள் வாழ்வானதே
முயற்சியும் அதிலே வீணானதே-2
வறண்ட பூமியிலும் நதியோட செய்தவரே
நீரே எங்கள் யெகோவாயீரே-2
நீரே எங்கள் யெகோவாயீரே

ஆராதனை ஆராதனை
அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே
ஆராதனை ஆராதனை
தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி

2.கண்ணீரே எங்கள் உணவானதே
களிப்பை மறந்து நாளானதே-2
காய்ந்த மரங்களையும் கனிதர செய்தவரே
நீரே எங்கள் யெகோவாயீரே-2
நீரே எங்கள் யெகோவாயீரே

ஆராதனை ஆராதனை
அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே
ஆராதனை ஆராதனை
தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி


English


Vazhi Ellam - வழி எல்லாம் | Ebenezer |Jack Warrior Vazhi Ellam - வழி எல்லாம் | Ebenezer |Jack Warrior Reviewed by Christking on September 08, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.