Kanikkaiyaga Vanthaen Kanivodu - காணிக்கையாக வந்தேன் கனிவோடு
- TAMIL
- ENGLISH
காணிக்கையாக வந்தேன் கனிவோடு ஏற்றிடுவாய்
படைத்தவா பணிகின்றேன் பரமனே புகழ்கின்றேன்
குயவன் நீயே களிமண் நானல்லவா
குன்றாத உனது மகிமை நான் சொல்லவா
இறைவனே ஆகட்டும் உன் உளமே
அழகான உலகம் அதில் ஒரு மனிதம் அன்பாக நீ படைத்தாய்
அனைவரும் மகிழ்ந்து ஆனந்தம் பகிர்ந்து அமைத்திட நீ பணித்தாய் – 2
எல்லாமே உனதன்றோ என்றே யாம் உணர்ந்தோம்
வல்லவா உம் கையில் யாம் கொணர்ந்தோம்
உம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக
சூடாத மலரும் சுவைக்காத உணவும் கையிலே பயன் என்ன
காய்க்காத மரமும் கனியில்லா கொடியும் காய்ந்தும் இழப்பென்ன – 2
எம் வாழ்வின் பொருளாக உம் மீட்பின் அருளாக
உம் கையில் எம்மை யாம் கொடுத்தோம்
உம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக
Kaannikkaiyaaka Vanthaen Kanivodu Aettiduvaay
Pataiththavaa Pannikinten Paramanae Pukalkinten
Kuyavan Neeyae Kalimann Naanallavaa
Kuntatha Unathu Makimai Naan Sollavaa
Iraivanae Aakattum Un Ulamae
Alakaana Ulakam Athil Oru Manitham Anpaaka Nee Pataiththaay
Anaivarum Makilnthu Aanantham Pakirnthu Amaiththida Nee Panniththaay – 2
Ellaamae Unathanto Ente Yaam Unarnthom
Vallavaa Um Kaiyil Yaam Konarnthom
Um Siththamae Niraivaeruka Um Thittamae Engum Niraivaakuka
Soodaatha Malarum Suvaikkaatha Unavum Kaiyilae Payan Enna
Kaaykkaatha Maramum Kaniyillaa Kotiyum Kaaynthum Ilappenna – 2
Em Vaalvin Porulaaka Um Meetpin Arulaaka
Um Kaiyil Emmai Yaam Koduththom
Um Siththamae Niraivaeruka Um Thittamae Engum Niraivaakuka
Kanikkaiyaga Vanthaen Kanivodu - காணிக்கையாக வந்தேன் கனிவோடு
Reviewed by Christking
on
September 27, 2020
Rating:
No comments: