Kalame Devanai Thedu - காலமே தேவனைத் தேடு - Christking - Lyrics

Kalame Devanai Thedu - காலமே தேவனைத் தேடு


காலமே தேவனைத் தேடு ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு

சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு
சிரான நித்திய ஜீவனை நாடு

மன்னுயிர்க்காய் மரித்தாரே மனு
மைந்த னெனநாமாம் வைத்திருந்தாரே
உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
உள்ளங்கனிந்து தனி ஜெபம் பண்ணு

பாவச் சோதனைகளை வெல்லு கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய் மனு வேலனைப் பணிய

சிறுவர்கள் என்னிடஞ் சேரத் தடை
செய்யா திருங்களென்றார் மனதார
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும்

வேலையுனக்குக் கைகூட சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட
காலை தேடுவோர் எனைக் கண்டடைவோரே
கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே


Kaalamae Thaevanaith Thaedu Jeeva
Kaarunnyar Paatham Panninthu Mantadu

Seelamudan Patham Paatikkonndaadu
Siraana Niththiya Jeevanai Naadu

Mannuyirkkaay Mariththaarae Manu
Maintha Nenanaamaam Vaiththirunthaarae
Un Siruttikarai Nee Uthayaththilennnu
Ullanganinthu Thani Jepam Pannnu

Paavach Sothanaikalai Vellu Ketta
Paarudal Paeyudan Porukku Nillu
Jeeva Kireedanj Siraththilanniyach
Sinthanai Sey Manu Vaelanaip Panniya

Siruvarkal Ennidanj Serath Thatai
Seyyaa Thirungalentar Manathaara
Paraloka Selva Mavarkkup Palikkum
Paakkiyamellaam Paranthu Jolikkum

Vaelaiyunakkuk Kaikooda Sathya
Vaethan Kirupai Varaththai Mantada
Kaalai Thaeduvor Enaik Kanndataivorae
Kannviliththu Jepanj Seyyumentarae

Kalame Devanai Thedu - காலமே தேவனைத் தேடு Kalame Devanai Thedu - காலமே தேவனைத் தேடு Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.