Enthan Ragam - எந்தன் இராகம் | Tony Thomas
Song | Enthan Ragam |
Album | Single |
Lyrics | Tony Thomas |
Music | Vicky Gideon |
Sung by | Tony Thomas |
- Tamil Lyrics
- English Lyrics
எந்தன் இராகம் உம் நாமம் போற்றிட
எந்தன் மூச்சு உம் வார்த்தை பேசிட-2
உங்க அன்பு நினைக்கையில்
என் உள்ளம் பொங்குதே
உங்க தியாகம் நினைக்கையில்
நன்றியால் பாடுவேன்- எந்தன் இராகம்
1.ஆகாதவன் என்று பலர் தள்ளிவிட்டார்கள்
ஆனாலும் நீங்க என்னை தெரிந்துகொண்டீரே
வாக்குப்பண்ணினவர்கள் எல்லாம் மறந்துவிட்டார்கள்
வாக்குத்தத்தம் தந்து என்னை உயர்த்தினீரே-எந்தன் இராகம்
2.சிறக்கில்லா பறவை போல அலைந்தபோதெல்லாம்
உமது கரம் கொண்டு தாங்கினீரய்யா
வாழ்வே மாயம் என்று விரக்தி அடைந்த போது
புதிய வழியை காட்டி நடக்க செய்தீரே-எந்தன் இராகம்
3.என்னையே உமக்காக தந்தேன் இராஜா
என்னை முற்றிலுமாய் பயன்படுத்துமே
சிலுவையில் எனக்காக வெற்றி சிறந்தவர்
உம்மோடு வாழ எனக்கு ஆசை இராஜா-எந்தன் இராகம்
English
Enthan Ragam - எந்தன் இராகம் | Tony Thomas
Reviewed by Christking
on
September 23, 2020
Rating:
No comments: