Iraajanae Um Varukaikkaana - இராஜனே உம் வருகைக்கான - Christking - Lyrics

Iraajanae Um Varukaikkaana - இராஜனே உம் வருகைக்கான


இராஜனே உம் வருகைக்கான
காலக்குறிகள் தெரிகின்றன
இயேசுவே! நீர் வரும்போது
விழித்திருந்தவர்கள்
கொடுத்து வைத்தவர்கள்
வாரும் இயேசு வாரும்
வாரும் விரைந்து வாரும்

1. மரித்து உயிர்த்தவர் இன்று வருகின்றார்
என்ற நினைவுடன் தாபரிப்போம்!
மங்கள நாள் விடியும் காலை
ஏங்கும் கன்னியாய் காத்திருப்போம்!

2. செல்வம் எங்கோ உள்ளம் அங்கே
என்ற உண்மையை மனதில் கொள்வோமே!
விண்ணுக்குரிய மகிமை வாழ்வை
மண்ணிலே நாம் நடத்தி முடிப்போம்!

3. மயக்கும் உலகம் அமிழ்த்தும் மோகம்
எதிரியவனின் பொறிகள் என்போம்!
விழித்து எதிர்த்தும் விலகிவாழ்ந்தும்
வஞ்சகன் மேல் வெற்றி பெறுவோம்!

4. தூய உள்ளம் தூய சிந்தை
காலமெல்லாம் அணிந்திருப்போம்!
ஜோதிமங்காமல் வாழ்ந்திருந்து
தேவ இராஜியம் பெருக உழைப்போம்!

5. உண்மையோடு கடமை முடித்தோர்
இன்றும் என்றும் உயர்த்தப்படுவார்!
ஜெபித்தும் உழைத்தும் சிலுவை சுமந்தோர்
தேவ வருகையில் பலனடைவார்!


Iraajanae Um Varukaikkaana
Kaalakkurikal Therikintana
Yesuvae! Neer Varumpothu
Viliththirunthavarkal
Koduththu Vaiththavarkal
Vaarum Yesu Vaarum
Vaarum Virainthu Vaarum

1. Mariththu Uyirththavar Intu Varukintar
Enta Ninaivudan Thaaparippom!
Mangala Naal Vitiyum Kaalai
Aengum Kanniyaay Kaaththiruppom!

2. Selvam Engaää Ullam Angae
Enta Unnmaiyai Manathil Kolvomae!
Vinnnukkuriya Makimai Vaalvai
Mannnnilae Naam Nadaththi Mutippom!

3. Mayakkum Ulakam Amilththum Mokam
Ethiriyavanin Porikal Enpom!
Viliththu Ethirththum Vilakivaalnthum
Vanjakan Mael Vetti Peruvom!

4. Thooya Ullam Thooya Sinthai
Kaalamellaam Anninthiruppom!
Jothimangaamal Vaalnthirunthu
Thaeva Iraajiyam Peruka Ulaippom!

5. Unnmaiyodu Kadamai Mutiththor
Intum Entum Uyarththappaduvaar!
Jepiththum Ulaiththum Siluvai Sumanthor
Thaeva Varukaiyil Palanataivaar!

Iraajanae Um Varukaikkaana - இராஜனே உம் வருகைக்கான  Iraajanae Um Varukaikkaana - இராஜனே உம் வருகைக்கான Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.