Inpa Keetham Thunpa - இன்ப கீதம் துன்ப - Christking - Lyrics

Inpa Keetham Thunpa - இன்ப கீதம் துன்ப


இன்ப கீதம் துன்ப நேரம்
ஈந்தீரே என் இயேசுவே
கொல்கதா பாதை சிலுவை சுமந்தே
கர்த்தாவே உம்மண்டை வந்தேன்

பெரு வெள்ளத்தின் புகலிடம் நீரே
பெரும் கன்மலை நிழலே
வீசிடும் கொண்டல் நிழலே
வற்றாத நீரூற்றும் நீரே – இன்ப

ஊளையிடும் ஓர் பாழும் நிலத்தில்
ஊக்கமுடன் என்னைத் தேடி
கண்டு உணர்த்தி கைதாங்கி நடத்தி
கண்ணின் மணிபோலக் காத்தீர் – இன்ப

போராட்டமான போன வாழ்நாளில்
நீரோட்டம் மோதும் இன்னலில்
முற்று முடிய வெற்றி அளித்தீர்
குற்றம் குறை நீக்கி காத்தீர் – இன்ப

உந்தன் சரீர பெலவீன நேரம்
எந்தன் கிருபையே போதும்
என்று உரைத்து என்னை அனைத்து
எத்தனையோ நன்மை செய்தீர் – இன்ப

கல்வாரிப் பாதை தோல்வியில்லையே
கர்த்தாவே முன்னோடி நீரே
உம்பின் நடந்தே உம்மைத் தொடர்ந்தே
உன்னத வீட்டை அடைவேன் – இன்ப

அழைத்தவரே உண்மையுள்ளோரே
அப்படியே ஜெயம் ஈவார்
இயேசுவே உம்மால் ஜெயம் அருளும்
எங்கள் பிதாவுக்கு ஸ்தோத்திரம் – இன்ப


Inpa Geetham Thunpa Naeram
Eentheerae en Yesuvae
Kolkathaa Paathai Siluvai Sumanthae
Karththaavae Ummanntai Vanthaen

Peru Vellaththin Pukalidam Neerae
Perum Kanmalai Nilalae
Veesidum Konndal Nilalae
Vattatha Neeroottum Neerae - Inpa

Oolaiyidum or Paalum Nilaththil
Ookkamudan Ennaith Thaeti
Kanndu Unarththi Kaithaangi Nadaththi
Kannnnin Mannipolak Kaaththeer - Inpa

Poraattamaana Pona Vaalnaalil
Neerottam Mothum Innalil
Muttu Mutiya Vetti Aliththeer
Kuttam Kurai Neekki Kaaththeer - Inpa

Unthan Sareera Pelaveena Naeram
Enthan Kirupaiyae Pothum
Entu Uraiththu Ennai Anaiththu
Eththanaiyo Nanmai Seytheer - Inpa

Kalvaarip Paathai Tholviyillaiyae
Karththaavae Munnoti Neerae
Umpin Nadanthae Ummaith Thodarnthae
Unnatha Veetta Ataivaen - Inpa

Alaiththavarae Unnmaiyullorae
Appatiyae Jeyam Eevaar
Yesuvae Ummaal Jeyam Arulum
Engal Pithaavukku Sthoththiram - Inpa

Inpa Keetham Thunpa - இன்ப கீதம் துன்ப  Inpa Keetham Thunpa - இன்ப கீதம் துன்ப Reviewed by Christking on August 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.