Innal Radsippu Kerra - இந்நாள் ரட்சிப்புக் கேற்ற - Christking - Lyrics

Innal Radsippu Kerra - இந்நாள் ரட்சிப்புக் கேற்ற


இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்
ஏற்ற நல் நாள் ஏற்ற நல் நாள்

சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து

சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன் -தேவ
சமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன்

வாடித் திகைத்துப் புலம்பாதே – உன்தன்
மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே

உலகச் சிநேகம் வெகு கேடு அதற்
குடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத் தேடு

இன்றுன் இரட்சகரிடம் திரும்பு – அவர்
இயற்றும் சம்பூரண ஜீவனை விரும்பு

இனிமேலாகட்டும் என் றெண்ணாதே -பவ
இச்சைக் குட்பட்டால் திரும்ப ஒண்ணாதே

கிறிஸ் தேசுவை உற்றுப் பாரு – அவர்
கிருபையாய்ச் சிந்தின ரத்தத்தைச் சேரு

பாவங்கள் அறச் சுத்திகரிப்பார் – உனைப்
பரிசுத்த வஸ்திரத்தால் அலங்கரிப்பார்

மகிமை நிறைந்த கிரீடஞ் சூடி – நித்திய
வாழ்வை அருள்வார் உனக்கின்பங் கொண்டாடி

ஏசுபெருமானை நீ நம்பு – அவர்
என்றென்றைக்கும் உனக் கிரட்சிப்பின் கொம்பு


Innaal Ratchippuk Kaetta Nal Naal
Aetta Nal Naal Aetta Nal Naal

Sonnaar Kiristhunakkuk Kirupaiyaich Sorinthu

Santhoshanthanaich Solla Vanthaen -thaeva
Samaathaana Vaarththaiyaip Pelanaakath Thanthaen

Vaatith Thikaiththup Pulampaathae – Unthan
Manathil Avisuvaasam Vaiththuk Kalangaathae

Ulakach Sinaekam Veku Kaedu Athar
Kudanthaip Padaamal Jeeva Maarkkaththaith Thaedu

Intun Iratchakaridam Thirumpu – Avar
Iyattum Sampoorana Jeevanai Virumpu

Inimaelaakattum en Rannnnaathae -pava
Ichchak Kutpattal Thirumpa Onnnnaathae

Kiris Thaesuvai Uttup Paaru – Avar
Kirupaiyaaych Sinthina Raththaththaich Seru

Paavangal Arach Suththikarippaar – Unaip
Parisuththa Vasthiraththaal Alangarippaar

Makimai Niraintha Kireedanj Sooti – Niththiya
Vaalvai Arulvaar Unakkinpang Konndaati

Aesuperumaanai Nee Nampu – Avar
Ententaikkum Unak Kiratchippin Kompu

Innal Radsippu Kerra - இந்நாள் ரட்சிப்புக் கேற்ற Innal Radsippu Kerra - இந்நாள் ரட்சிப்புக் கேற்ற Reviewed by Christking on August 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.