Inimai Inimai Ithu Inimai - இனிமை இனிமை இது இனிமை - Christking - Lyrics

Inimai Inimai Ithu Inimai - இனிமை இனிமை இது இனிமை


இனிமை இனிமை இது இனிமை
மகிமை மகிமை புது மகிமை
இயேசுவின் மார்பில் நான் சாய்ந்து கொண்டிருந்தால்
இந்த நாள் முழுவதும் இல்லை தனிமை -3

காலையும் மாலையும் புது கிருபை
கண்ணின் மணிபோல் காக்கும் கிருபை
இறுதிவரைக்கும் வரும் கிருபை
நிலைத்திருக்கும் நம் தேவ கிருபை

மலைகள் விலகினாலும் மாறா கிருபை
மன்னன் இயேசு வாக்களித்த வல்ல கிருபை
பர்வதங்கள் பெயர்ந்து பயங்கரம் சூழ்ந்தாலும்
பரிசுத்தவான்களைக் காக்கும் கிருபை

ஆநாதி சினேகத்தால் வந்த கிருபை
ஆயிரம் தலைமுறை காக்கும் கிருபை
அழகிய தேவகுமாரன் இயேசு
அளித்திட்ட அதிசயமான கிருபை

வனாந்தர வழிதனில் வந்த கிருபை
வழிதப்பிப்போனோரைக் காக்கும் கிருபை
வல்லமையுள்ள தேவனின் ஆவி
வரம் தந்து காத்திட்ட தேவகிருபை


Inimai Inimai Ithu Inimai
Makimai Makimai Puthu Makimai
Yesuvin Maarpil Naan Saaynthu Konntirunthaal
Intha Naal Muluvathum Illai Thanimai -3

Kaalaiyum Maalaiyum Puthu Kirupai
Kannnnin Mannipol Kaakkum Kirupai
Iruthivaraikkum Varum Kirupai
Nilaiththirukkum Nam Thaeva Kirupai

Malaikal Vilakinaalum Maaraa Kirupai
Mannan Yesu Vaakkaliththa Valla Kirupai
Parvathangal Peyarnthu Payangaram Soolnthaalum
Parisuththavaankalaik Kaakkum Kirupai

Aanaathi Sinaekaththaal Vantha Kirupai
Aayiram Thalaimurai Kaakkum Kirupai
Alakiya Thaevakumaaran Yesu
Aliththitta Athisayamaana Kirupai

Vanaanthara Valithanil Vantha Kirupai
Valithappipponoraik Kaakkum Kirupai
Vallamaiyulla Thaevanin Aavi
Varam Thanthu Kaaththitta Thaevakirupai

Inimai Inimai Ithu Inimai - இனிமை இனிமை இது இனிமை Inimai Inimai Ithu Inimai - இனிமை இனிமை இது இனிமை Reviewed by Christking on August 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.