Inba Yesu Rajavai Naan - இன்ப இயேசு ராஜாவை நான் - Christking - Lyrics

Inba Yesu Rajavai Naan - இன்ப இயேசு ராஜாவை நான்


இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தாள் போதும் (2)

1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2)
கறைதிரை அற்ற பரிசுத்தரோடு
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2)

2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது (2)
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2)

3. முள் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2)
வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2)

4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2)

5. ஆஹா! எக்காலம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ (2)
அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் (2)


Inba Iyeasu Raajaavai Naan Paarththaal Poadhum
Magimaiyil Avaroadu Naan Vaazhnthaal Poadhum (2)
Niththiyamaam Moatcha Veettil Saerndhaal Poadhum
Allaelooyaa Koottaththil Naan Magizhndhaal Poadhum (2)

1. Yaesuvin Raththathaalae Meetkappattu
Vasanamaam Vaeliyaalae Kaakkappattu (2)
Karaithirai Atra Parisuththaroadu
Aezhaiyaan Pon Veedhiyil Ulaaviduvaen (2)

2. Thoodhargal Veenaigalai Meettum Poadhu
Niraivaana Jeya Koasham Muzhangum Poadhu (2)
Allaelooyaa Geetham Paadi Kondu
Anbaraam Yaesuvoadu Agamagizhvaen (2)

3. Mul Kreedam Sooddappatta Thalaiyai Paarppaen
Porkreedam Sooddi Naanum Pugazhndhiduvaen (2)
Vaarinaal Adippatta Muthugai Paarththu
Ovvoru Kaayangalaal Muththam Seivaen (2)

4. Ennullam Nandriyaal Niraindhidudhae
Endhanin Baakkiya Veettai Ninaikkaiyilae (2)
Allaelooyaa Aamen Allaelooyaa
Varnikka Endhan Naavu Poadhaadhaiyaa (2)

5. Aahaa! Ekkaalam Endru Muzhangidumoa
Aezhai en Aaval Endru Theerththidumoa (2)
Appaa! En Kanneer Endru Thudaikkiraaroa
Aavalaai Aengidudhae Enadhullamum (2)

Inba Yesu Rajavai Naan - இன்ப இயேசு ராஜாவை நான் Inba Yesu Rajavai Naan - இன்ப இயேசு ராஜாவை நான் Reviewed by Christking on August 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.