Gunapadu Paavi Deva - குணப்படு பாவி தேவ - Christking - Lyrics

Gunapadu Paavi Deva - குணப்படு பாவி தேவ


குணப்படு பாவி, தேவ
கோபம் வரும் மேவி – இப்போ

அனுபல்லவி

கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
காலமிருக்கையில் சீலமதாக நீ

சரணங்கள்

1. கர்த்தனை நீ மறந்தாய் – அவர்
கற்பனையைத் துறந்தாய்,
பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப்
பாவ வழி திரிந்தாய்,
புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,
உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்

2. துக்கமடையாயோ? பாவி
துயரமாகாயோ?
மிக்கப் புலம்பாயோ? – மனம்
மெலிந்துருகாயோ?
இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ?
தக்க அருமறைப் பக்கந் தொடராயோ?

3. தாவீ தரசனைப்போல் – தன்னைத்
தாழ்த்தும் மனாசேயைப்போல்
பாவி மனுஷியைப்போல் – மனம்
பதைத்த பேதுருபோல்,
தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று
கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி

4. உன்னை நீ நம்பாதே! – இவ்
வுலகையும் நம்பாதே;
பொன்னை நீ நம்பாதே – எப்
பொருளையும் நம்பாதே;
தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
நின்னையும் ரட்சிப்பார் , அனைவரைப் பற்று


Kunappadu Paavi, Thaeva
Kopam Varum Maevi – Ippo

Anupallavi

Kanappoluthinil Kaayam Marainthupom
Kaalamirukkaiyil Seelamathaaka Nee

Saranangal

1. Karththanai Nee Maranthaay – Avar
Karpanaiyaith Thuranthaay,
Pakthiyinmai Therinthaay – Pollaap
Paava Vali Thirinthaay,
Puththiketta Aattuk Kuttiyae Oti Vaa,
Uththama Maeyppanaar Kaththi Yalaikkiraar

2. Thukkamataiyaayo? Paavi
Thuyaramaakaayo?
Mikkap Pulampaayo? – Manam
Melinthurukaayo?
Ikkanam Paavak Kasappai Yunaraayo?
Thakka Arumaraip Pakkan Thodaraayo?

3. Thaavee Tharasanaippol – Thannaith
Thaalththum Manaaseyaippol
Paavi Manushiyaippol – Manam
Pathaiththa Paethurupol,
Thaevanukkaerkaatha Theemaiseythaenentu
Koovip Pulampu Nal Aaviyin Sorpati

4. Unnai Nee Nampaathae! – Iv
Vulakaiyum Nampaathae;
Ponnai Nee Nampaathae – Ep
Porulaiyum Nampaathae;
Thannaip Paliyittuth Tharanni Meettavar
Ninnaiyum Ratchippaar , Anaivaraip Pattu

Gunapadu Paavi Deva - குணப்படு பாவி தேவ Gunapadu Paavi Deva - குணப்படு பாவி தேவ Reviewed by Christking on August 09, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.