Ezhunthituveer Neer Vaaliparae - எழுந்திடுவீர் நீர் வாலிபரே
- TAMIL
- ENGLISH
எழுந்திடுவீர் நீர் வாலிபரே – நாமும்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
இன்னும் கொஞ்சம் நேரம் இயேசு வரும் நேரம்
நித்திரை செய்யாமல் உழைத்திடுவோம்
எழுந்திடுவோம் நாம் எழுந்திடுவோம்
இயேசுவின் வீரரே எழுந்திடுவோம்
அனுதினம் அழிந்திடும் பாரதம் காத்திட
தூசியை உதறி எழுந்திடுவோம்
1. விழித்திருங்கள் நீர் கன்னியரே – நல்ல
விளக்குகள் எரிய எண்ணெய் ஊற்றுவீர்
மணவாளன் வருகையின் சத்தம் கேட்பதாலே
கன்னியர்கள் நாமும் எழுந்திடுவோம்
2. நித்திரைகள் வேண்டாம் முதியோரே – நல்ல
நேரம் வேளை தன்னை நிதானிப்பீரே
தீர்க்கர் முற்பிதாக்கள் செப்பிய உரைகள்
தினம் நிறைவேற கண்டதில்லையோ
3. சஞ்சலங்கள் வேண்டாம் தாய்மாரே – நல்ல
தைலாபிஷேகம் செய்ய வருவீரே
புதையல்கள் போன்ற புத்திரராம் பரணி
நேசர் பாதத்தில் உடைத்திடுவீர்
4. இந்து தேசம் வெல்ல முயன்றிடுவோம் – நல்ல
இயேசு முன்னே செல்வார் பயம் இனியேன்
என்ன தடை வரினும் இயேசு நாமம் ஜெயிக்கும்
இன்றே யாவரும் எழுந்திடுவோம்
Elunthiduveer Neer Vaaliparae – Naamum
Yesuvin Naamaththai Uyarththiduvom
Innum Konjam Naeram Yesu Varum Naeram
Niththirai Seyyaamal Ulaiththiduvom
Elunthiduvom Naam Elunthiduvom
Yesuvin Veerarae Elunthiduvom
Anuthinam Alinthidum Paaratham Kaaththida
Thoosiyai Uthari Elunthiduvom
1. Viliththirungal Neer Kanniyarae – Nalla
Vilakkukal Eriya Ennnney Oottuveer
Manavaalan Varukaiyin Saththam Kaetpathaalae
Kanniyarkal Naamum Elunthiduvom
2. Niththiraikal Vaenndaam Muthiyorae – Nalla
Naeram Vaelai Thannai Nithaanippeerae
Theerkkar Murpithaakkal Seppiya Uraikal
Thinam Niraivaera Kanndathillaiyo
3. Sanjalangal Vaenndaam Thaaymaarae – Nalla
Thailaapishaekam Seyya Varuveerae
Puthaiyalkal Ponta Puththiraraam Paranni
Naesar Paathaththil Utaiththiduveer
4. Inthu Thaesam Vella Muyantiduvom – Nalla
Yesu Munnae Selvaar Payam Iniyaen
Enna Thatai Varinum Yesu Naamam Jeyikkum
Inte Yaavarum Elunthiduvom
Ezhunthituveer Neer Vaaliparae - எழுந்திடுவீர் நீர் வாலிபரே
Reviewed by Christking
on
August 07, 2020
Rating:
No comments: