Ethu Vendum Sol - எது வேண்டும் சொல் - Christking - Lyrics

Ethu Vendum Sol - எது வேண்டும் சொல்


எது வேண்டும் சொல் நேசனே உனக்
கெதுவேண்டாம் என் நேசனே

மதிவாட மனம்வாட மயக்கங் கண்ணிறைந்தாட
மதுபான முண வேண்டுமோ அன்றித்
துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்
சுத்த ஜலம் வேண்டுமோ

வாதாடி நகையாடி வழிகளில் விழுந்தாடி
மதுவூண்டு கெடவேண்டுமோ அன்றித்
தாதாவே கனவானே தனவானே யெனச் சாற்றத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ

பகைதந்து பழிதந்து பரியாசந் தருமது
பான முண வேண்டுமோ அன்றித்
தகை கொண்ட கதியேற அருளோடு புகழ்பெறத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ

சண்டை காயம் கந்தை அமளி வேதனையாதி
தருங்குடி வெறி வேண்டுமோ அன்றிப்
பன்டை வேதஞ் சொன்னபடி வோட்சம் பெற ஜல
பானமது வேண்டுமோ

இரத்தக்கண் பெருந்துக்கம் ஏக்கம் நடுக்கம் வெட்கம்
இவைதருன் குடி வேண்டுமோ அன்றித்
திரத்துக்கும் அறிவுக்குஞ் சுகத்துக்கு மிடமான
தெளிந்த தண்ணீர் வேண்டுமோ


Ethu Vaenndum Sol Naesanae Unak
Kethuvaenndaam en Naesanae

Mathivaada Manamvaada Mayakkang Kannnnirainthaada
Mathupaana Muna Vaenndumo Antith
Thuthipaadum Ulakorun Pukalpaati Makilnthaadach
Suththa Jalam Vaenndumo

Vaathaati Nakaiyaati Valikalil Vilunthaati
Mathuvoonndu Kedavaenndumo Antith
Thaathaavae Kanavaanae Thanavaanae Yenach Saattath
Thannnnee Runnna Vaenndumo

Pakaithanthu Palithanthu Pariyaasan Tharumathu
Paana Muna Vaenndumo Antith
Thakai Konnda Kathiyaera Arulodu Pukalperath
Thannnnee Runnna Vaenndumo

Sanntai Kaayam Kanthai Amali Vaethanaiyaathi
Tharunguti Veri Vaenndumo Antip
Pantai Vaethanj Sonnapati Votcham Pera Jala
Paanamathu Vaenndumo

Iraththakkann Perunthukkam Aekkam Nadukkam Vetkam
Ivaitharun Kuti Vaenndumo Antith
Thiraththukkum Arivukkunj Sukaththukku Midamaana
Thelintha Thannnneer Vaenndumo

Ethu Vendum Sol - எது வேண்டும் சொல் Ethu Vendum Sol - எது வேண்டும் சொல் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.