Enthan Jeevan Yesuve – எந்தன் ஜீவன் இயேசுவே - Christking - Lyrics

Enthan Jeevan Yesuve – எந்தன் ஜீவன் இயேசுவே


எந்தன் ஜீவன் இயேசுவே
சொந்தமாக ஆளுமே
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்

1. எந்தன் கை பேரன்பினால்
ஏவப்படும் எந்தன் கால்
சேவை செய்ய விரையும்
அழகாக விளங்கும்

2. எந்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும் என்வாய்
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்

3. எந்தன் ஆஸ்தி தேவரீர்
முற்றும் அங்கீகரிப்பீர்
புத்தி கல்வி யாவையும்
சித்தம் போல் பிரயோகியும்

4. எந்தன் சித்தம் இயேசுவே
ஒப்புவித்து விட்டேனே
எந்தன் நெஞ்சில் தங்குவீர்
அதை நித்தம் ஆளுவீர்

5. திருப்பாதம் பற்றினேன்
எந்தன் நேசம் ஊற்றினேன்
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்


Endhan Jeevan Yaesuvae
Sondhamaaga Aalumae
Endhan Kaalam Naeramum
Neer Kaiyaadiyarulum
1. Endhan Kai Paeranbinaal
Aevappadum Endhan Kaal
Saevai Seiya Viraiyum
Azhagaaga Vilangum

2. Endhan Naavu Inbamaai
Ummai Paadavum Envaai
Meetpin Seidhi Kooravum
Aedhuvaakkiyarulum

3. Endhan Aasthi Dhaevareer
Mutrum Angeegarippeer
Buddhi Kalvi Yaavaiyum
Sittham Poal Pirayoagiyum

4. Endhan Sittham Yaesuvae
Oppuvithu Vittaenae
Endhan Nenjil Thanguveer
Adhai Nittham Aaluveer

5. Thiruppaadham Patrinaen
Endhan Naesam Ootrinaen
Ennaiyae Samoolamaai
Thattham Seidhaen Nitthamaai

Enthan Jeevan Yesuve – எந்தன் ஜீவன் இயேசுவே Enthan Jeevan Yesuve – எந்தன் ஜீவன் இயேசுவே Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.