Ennai Sumapathanal Iraiva - என்னை சுமப்பதனால் இறைவா - Christking - Lyrics

Ennai Sumapathanal Iraiva - என்னை சுமப்பதனால் இறைவா


என்னை சுமப்பதனால் இறைவா
உம் சிறகுகள் முறியவில்லை
அள்ளி அணைப்பதினால் இறைவா
உம் அன்பு குறையவில்லை
ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
வானம் கிழிவதில்லை
ஆயிரம் மைகல்கள் நடந்திட்ட போதும்
நதிகள் அழுவதில்லை

கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்
குழந்தை சுமையில்லை
கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு
இமைகள் சுமையில்லை
மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்
பனித்துளி சுமையில்லை
வானை சுமக்கும் மேகத்திற்கென்றும்
மழைத்துளி சுமையில்லை
மழைத்துளி சுமையில்லை

அகழும் மனிதரை தாங்கும்
பூமிக்கு முட்கள் சுமையில்லை
இகழும் மனிதரில் இரங்கும்
மனிதிற்கு சிலுவைகள் சுமையில்லை
உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்
நான் ஒரு சுமையில்லை
உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என்
இதயம் சுமையில்லை


Ennai Sumappathanaal Iraivaa
Um Sirakukal Muriyavillai
Alli Annaippathinaal Iraivaa
Um Anpu Kuraiyavillai
Aayiram Minnal Itiththitta Pothum
Vaanam Kilivathillai
Aayiram Maikalkal Nadanthitta Pothum
Nathikal Aluvathillai

Karuvai Sumakkum Thaaykku Entum
Kulanthai Sumaiyillai
Karuvili Sumakkum Iruvili Atharku
Imaikal Sumaiyillai
Mathuvai Sumakkum Malarkalukkentum
Paniththuli Sumaiyillai
Vaanai Sumakkum Maekaththirkentum
Malaiththuli Sumaiyillai
Malaiththuli Sumaiyillai

Akalum Manitharai Thaangum
Poomikku Mutkal Sumaiyillai
Ikalum Manitharil Irangum
Manithirku Siluvaikal Sumaiyillai
Ulakin Paavam Sumakkum Tholkalil
Naan Oru Sumaiyillai
Uyirai Eeyum Un Sirakin Nilalil en
Ithayam Sumaiyillai

Ennai Sumapathanal Iraiva - என்னை சுமப்பதனால் இறைவா Ennai Sumapathanal Iraiva - என்னை சுமப்பதனால் இறைவா Reviewed by Christking on August 06, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.