Ennai Jeevapaliyaay Oppuviththaen - என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்
- TAMIL
- ENGLISH
என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் ,
ஏற்றுக் கொள்ளும் , யேசுவே
அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று
சொன்ன வாக்குத்தத்த மல்லாது , இப்போது
— என்னை
1. அந்தகாரத்தி னின்றும் , பவப் பேய்
அடிமைத் தனத்தி னின்றும் ,
சொந்த ரத்தக் கிரயத்தால் எனைமீட்ட
எந்தையே , உந்தனுக்கிதோ ! படைக்கிறேன்
— என்னை
2. ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீன மாக்கி வைத்தேன் ;
பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கின்றேன் ; கருணைசெய் , தேவா
— என்னை
3. நீதியி னாயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேன் உமக்கு ;
ஜோதி பரிசுத்த ராலய மாகவே
சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை
— என்னை
Ennai Jeevapaliyaay Oppuviththaen ,
Aettuk Kollum , Yaesuvae
Annai Thanthai Untham Sannathi Munnintu
Sonna Vaakkuththaththa Mallaathu , Ippothu
— Ennai
1. Anthakaaraththi Nintum , Pavap Paey
Atimaith Thanaththi Nintum ,
Sontha Raththak Kirayaththaal Enaimeetta
Enthaiyae , Unthanukkitho ! Pataikkiraen
— Ennai
2. Aathma Sareeramathai Umakku
Aatheena Maakki Vaiththaen ;
Paathramathaay Athai Paaviththuk Kollak
Kaaththirukkinten ; Karunnaisey , Thaevaa
— Ennai
3. Neethiyi Naayuthamaay Avayavam
Naernthu Vittaen Umakku ;
Jothi Parisuththa Raalaya Maakavae
Sonthamaayth Thanthaen Entan Sareeraththai
— Ennai
Ennai Jeevapaliyaay Oppuviththaen - என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்
Reviewed by Christking
on
August 03, 2020
Rating:
No comments: