Ennaalumae Thuthippaay - எந்நாளுமே துதிப்பாய் - Christking - Lyrics

Ennaalumae Thuthippaay - எந்நாளுமே துதிப்பாய்


எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே , நீ
எந்நாளுமே துதிப்பாய் !

இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த ;
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது
— எந்நாளுமே

1. பாவங்கள் எத்தனையோ – நினையா திருத்தாருன்
பாவங்கள் எத்தனையோ ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி
— எந்நாளுமே

2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை ?
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,
நேயமதாக ஜீவனை மீட்டதால்
— எந்நாளுமே

3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே , பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை ;
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு ,
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால்
— எந்நாளுமே

4. பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே ,
பூமிக்கும் வானத்துக்கும் ;
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே , சத்திய மேயிது
— எந்நாளுமே

5. மன்னிப்பு மாட்சிமையாம் – மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம் ;
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ?
எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே
— எந்நாளுமே

6. தந்தைதன் பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு ?
எந்த வேளையும் அவரோடு தங்கினால் ,
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே
— எந்நாளுமே


Ennaalumae Thuthippaay – Ennaaththumaavae , Nee
Ennaalumae Thuthippaay !

Innaal Varaiyilae Unnathanaar Seytha ;
Ennnnillaa Nanmaikal Yaavu Maravaathu
— Ennaalumae

1. Paavangal Eththanaiyo – Ninaiyaa Thiruththaarun
Paavangal Eththanaiyo ?
Paalaana Nnoyai Akattik Kunamaakkip
Paarinil Vaiththa Makaa Thaya Vaiennnni
— Ennaalumae

2. Eththanaiyo Kirupai – Unnuyirkkuch Seythaarae
Eththanaiyo Kirupai ?
Niththamunaimuti Soottinathumanti ,
Naeyamathaaka Jeevanai Meettathaal
— Ennaalumae

3. Nanmaiyaalun Vaayai – Niraiththaarae , Poorththiyaay
Nanmaiyaalun Vaayai ;
Unvayathu Kalukaippol Palanganndu ,
Ongu Ilamaipo Laakavae Seythathaal
— Ennaalumae

4. Poomikkum Vaanaththukkum – Ulla Thooram Polavae ,
Poomikkum Vaanaththukkum ;
Saami Payamullavar Mael Avar Arul
Saalavum Thangumae , Saththiya Maeyithu
— Ennaalumae

5. Mannippu Maatchimaiyaam – Maathaevanarulum
Mannippu Maatchimaiyaam ;
Ennnuvaayo Kilakku Maerkin Thooramae ?
Ennnnil Unpaavam Akantathaththooramae
— Ennaalumae

6. Thanthaithan Pillaikatku – Thayavo Tirangaano
Thanthaithan Pillaikatku ?
Entha Vaelaiyum Avarodu Thanginaal ,
Sontham Paaraattiyae Thookkich Sumappaarae
— Ennaalumae

Ennaalumae Thuthippaay - எந்நாளுமே துதிப்பாய் Ennaalumae Thuthippaay - எந்நாளுமே துதிப்பாய் Reviewed by Christking on August 02, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.